சட்டசபை தேர்தல்: பாஜகவை பதம் பார்க்க போகிறதா கர்நாடகா லிங்காயத்துகளின் இடஒதுக்கீடு கோரிக்கை?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவுக்கு பேரிடியாக புறப்பட்டிருக்கிறது கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான லிங்காயத்துகளின் இடஒதுக்கீடு கோரிக்கை. தமது வாக்கு வங்கியாக கருதப்படும் லிங்காயத்துகளின் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது ஆளும் பாஜக. குஜராத்தில் 2015-ல் இதேபோல இடஒதுக்கீடு கிளர்ச்சியால் பெரும் பின்னடைவை சந்தித்த பாடத்தில் இருந்து கற்றுக் கொண்டு கர்நாடகாவில் சமாளித்துவிடுமா பாஜக? என்பதும் எதிர்பார்ப்பு.
குஜராத்... பாஜகவின் கோட்டை.. 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தோல்வியையே சந்திக்காத மாநிலம்.. 7 முறை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக குஜராத்தில்.. இந்த பெருமிதங்களுக்கு நடுவே 2015-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு சாவு பயத்தை காட்டிய சம்பவங்களும் உண்டு.

2015-ம் ஆண்டு குஜராத்தில் படேல் ஜாதியினர் இடஒதுக்கீடு போராட்டம் ஒன்றை நடத்தினர். குஜராத்தில் பாஜகவின் பெரும்பான்மையான வாக்கு வங்கி படேல் சமூகம்தான். படேல் ஜாதியினர் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஹர்திக் படேல் என்ற இளைஞர் தலைமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த படேல் சமூகமும் அப்போது பாஜகவுக்கு எதிராக நின்றது. இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டை ஒழி என்கிற ஆபத்தான முழக்கத்தை இளைஞர் ஹர்திக் படேல் முன்வைத்தார். அப்போது நடந்த தேர்தலில் பாஜக நூலிழையில் தப்பியது. காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற்றது.
2015-ல் இடஒதுக்கீடு கோரி படேல் ஜாதியினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக, முந்தைய தேர்தலில் 115 இடங்களில் வென்ற பாஜக 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 99 இடங்கள்தான் பெற முடிந்தது. அதேபோல் முந்தைய தேர்தலில் 61 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெல்ல முடிந்தது. இதனால் பாஜக ரொம்பவே அதிர்ந்து போனது. அன்று தூக்கத்தை தொலைத்த பாஜக இஞ்ச் இஞ்ச் பை காய்நகர்த்தி இறுதியாக படேல் ஜாதியின் ஹர்திக் படேலையும் வளைத்துப் போட்டு இப்போது வரலாறு காணாத வெற்றியை 2022 சட்டசபை தேர்தலில் அறுவடை செய்துள்ளது.
குஜராத்தில் அன்று பாஜக எதிர்கொண்ட அதே நிலைமைதான் இப்போது கர்நாடகாவிலும் இருக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடா ஆகியவை இருபெரும் ஜாதிகள். லிங்காயத் ஜாதியினர் பாஜகவின் வாக்கு வங்கியாக; ஒக்கலிகா கவுடா ஜாதியினர் காங்கிரஸ், ஜேடிஎஸ் வாக்கு வங்கியாக உள்ளனர். லிங்காயத் ஜாதியினர் ஏற்கனவே தங்களை தனி மதமாக அறிவிக்க கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நாங்கள் இந்துக்களே அல்ல என்ற லிங்காயத்துகளின் முழக்கம் பாஜகவுக்கு குலைநடுக்கத்தை கொடுத்திருந்தது. இப்போது இடஒதுக்கீடு முழக்கத்தின் மூலம் பாஜகவின் ஆட்சி அதிகார கனவுக்கு ஆப்பு வைக்கப் போகிறது லிங்காயத் ஜாதி.
கர்நாடகாவில் 50% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை தமிழகம், ஜார்க்கண்ட் மாநிலங்களைப் போல அதிகரிக்க முயற்சிக்கிறது கர்நாடகா. லிங்காயத் ஜாதியினரில் வீரசைவ லிங்காயத், பஞ்சமசாலி லிங்காயத் ஆகிய இரு பிரிவினர் உள்ளனர். இதில் பெரும்பான்மையினர் பஞ்சமசாலி லிங்காயத். வீரசைவ லிங்காயத்துகளுக்கு கர்நாடகா இடஒதுக்கீட்டில் பிரிவு 3B-ல் 5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போது பஞ்சமசாலி லிங்காயத்துகள் இடஒதுக்கீட்டில் பிரிவு 2A-ல் தங்களை கொண்டு வந்து 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கின்றனர். இதற்காகத்தான் பெலகாவியில் லட்சகணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நேற்று நடத்தப்பட்டது. லிங்காயத் ஜாதியினர் கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கான இடங்களை அதிகரித்துக் கொள்ள முனைகின்றனர். அவர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்திய ஆளும் பாஜக இப்போது என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்வி. ஏற்கனவே கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை ஆளும் பாஜகவுக்கு ஆகப் பெரும் தலைவலியாக இருக்கிறது. கர்நாடகா சட்டசபையில் நேற்று எல்லை பிரச்சனை தொடர்பாக, கர்நாடகாவின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த எல்லைப் பிரச்சனையை விட லிங்காயத் ஜாதியினரின் இடஒதுக்கீட்டுப் போராட்டம் கர்நாடகா சட்டசபை தேர்தலில் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications