‛ஆபாச வீடியோ’ எடுத்து.. இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. சிக்கிய இளைஞர்! 6 ஆண்டுகளாக நடந்த கொடூரம்
பெங்களூர்: விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் பழக்கமான மைனர் பெண்ணை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அதனை காண்பித்து கடந்த 6 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்தது மட்டுமின்றி ரூ.85 ஆயிரம் பணம் பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்னர்.
கர்நாடகா மாநிலம் பீதரை சேர்ந்தவர் சிவக்குமார் ஹொசள்ளி. இவருக்கு வயது 25. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடுப்பியில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூர் புறநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவருக்கு 18 வயது நிரம்பவில்லை. வயது 16 தான். இருப்பினும் சிவக்குமார் ஹொசள்ளி அவரிடம் பேசி செல்போன் எண்ணை வாங்கினார். இருவரும் செல்போன் மூலம் பேசி வந்தனர்.
நண்பர் என்ற அடிப்படையில் அந்த பெண் பேசி வந்தார். கடந்த 2018 ம் ஆண்டு சிவக்குமார் ஹொசள்ளி இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோவாக சிவக்குமார் ஹொசள்ளி தனது செல்போனில் எடுத்து வைத்தார். அதன்பிறகு அந்த போட்டோ மற்றும் வீடியோவை காண்பித்து சிவக்குமார் ஹொசள்ளி அவரை மிரட்ட தொட்ஙகினார்.
மேலும் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி ஆபாச படங்களை வெளியே விடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் அவரை தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது சிவக்குமார் ஹொசள்ளி அவரை பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது செலவுக்கு மிரட்டி பணமும் பறித்துள்ளார். இப்படியாக அந்த இளம்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த சிவக்குமார் ஹொசள்ளி ரூ.85 ஆயிரம் வரை பறித்துள்ளார்.
இருப்பினும் சிவக்குமார் ஹொசள்ளி இளம்பெண்ணை விடவில்லை. தொடர்ந்து மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளதோடு, தன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் சம்பவம் குறித்து நெலமங்களா போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் ஹொசள்ளியை அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் சசிதர் கூறுகையில், ‛‛சிவக்குமார் ஹொசள்ளி மீது 354 ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடர்தல்), 376 (2) (பலாத்காரம்), 506 (கொலை மிரட்டல்), 384 (மிரட்டி பணம் பறித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்சோ பிரிவுலும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம்'' என்றார். கைதான சிவக்குமார் ஹொசள்ளியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications