கொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் உறவுக்கார பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா அருகே கே.ஆர்.எஸ். பகுதி பஜார் லைனில் வசிப்பவர் கங்காராம். மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு ராஜ் (12), கோமல் (7), குணால் (4) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

கங்காராம் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். வெளிமாநிலங்களுக்கு சென்றால் 15 நாளுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார். சில நாட்களுக்கு முன்பு வியாபாரத்துக்காக வெளியூர் சென்றார்.

இந்நிலையில் பிப்.,6ல் லட்சுமி, மகன்களான ராஜ், கோமல், குணால், கங்காராமின் சகோதரர் மகன் கோவிந்தா(8) ஆகியோர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். யாரோ அவர்களை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

பெரியப்பா மகள் கைது

பெரியப்பா மகள் கைது

இந்த சம்பவம் பெரும் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து மண்டியா கே.ஆர்.எஸ்., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் 5 பேரையும் கொலை செய்ததாக லட்சுமியின் பெரியப்பா மகள் (அக்காள்) லட்சுமி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலை குறித்து கைதான லட்சுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

 தங்கை கணவருடன் கள்ளக்காதல்

தங்கை கணவருடன் கள்ளக்காதல்

அந்த வாக்குமூலம் வருமாறு: எனது சித்தப்பா மகளை திருமணம் செய்ததால் கங்காராமுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. 6 மாதங்களாக கள்ளத்தொடர்பில் இருந்தோம். இது கங்காராம் மனைவியான தங்கை லட்சுமிக்கு தெரிந்தது. அவர் இருவரையும் கண்டித்தார். இதனால் தங்கையை கைவிட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கங்காராமிடம் கூறினேன். அவர் மறுப்பு தெரிவித்தார். என்னை விட்டு விலக முயன்றார். இதனால் கோபம் அடைந்தேன்.

 ஒன்றாக இரவு உணவு

ஒன்றாக இரவு உணவு

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் தங்கையை கொலை செய்தால் கங்காராமுடன் தொடர்பில் இருக்கலாம் என நினைத்தேன். இதனால் பிப்.,5 இரவு 9 மணிக்கு தங்கையின் வீட்டுக்கு சென்றேன். இருவரும் சேர்ந்து உணவு சாப்பிட்டோம்.

சுத்தியால் தாக்கி கொலை

சுத்தியால் தாக்கி கொலை

நள்ளிரவில் தங்கை லட்சுமியை சுத்தியால் தாக்கி கொலை செய்தேன். கண்விழித்த லட்சுமியின் மகன்கள் 3 பேரையும் சுத்தியால் தாக்கி கொலை செய்தேன். அதிகாலை 4 மணிவரை பிணங்களுடன் இருந்தேன். அதன்பின் மைசூரில் உள்ள வீட்டுக்கு பஸ்சில் சென்று ஒன்றும் நடக்காதது போல் நாடகமாடினேன். என்மீது சந்தேகம் வராமல் இருக்க பிப்., 6 காலை 10 மணிக்கு கொலை நடந்த வீட்டுக்கு வந்து லட்சுமி, குழந்தைகளின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதேன்.'' என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+