பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரில் தென்னாப்பிரிக்க பயணிக்கு கொரோனா.. விமானப் பயணிகளுக்கு இனி புதிய கட்டுப்பாடு

Google Oneindia Tamil News

பெங்களூரு: தென்னாப்பிரிக்காவில் ஓமைக்கரான் எனப்படும் உருமாரிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கர்நாடகாவில் விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended Video

    Omricon Covid variant from South Africa Triggers World | OneIndia Tamil

    பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

    தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்! தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!

    இதையடுத் கர்நாடாகாவில் வெளிநாடு மற்றும் மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உருமாறிய கொரோனா

    உருமாறிய கொரோனா

    ஓமைக்ரான் எனும் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பி 1.1.529 என கண்டறியப்பட்ட வைரசுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியில் ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்நாடுகள் மக்களைக் காப்பாற்ற தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் அதை செயலிழக்கும் திறன் ஓமைக்ரானுக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளுக்கு தடை விதித்தும், தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் போன்ற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

    பெங்களூருவில்

    பெங்களூருவில்

    நவம்பர் 20 ஆம் தேதி பெங்களூரு வந்த இரண்டு தென்னாப்பிரிக்க பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து
    கர்நாடகாவில் ஓமைக்ரான் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொண்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் பேட்டி அளித்தார்.

    அனைவருக்கும் 2வது டோஸ்

    அனைவருக்கும் 2வது டோஸ்

    அமைச்சர் ஆர்.அசோக் அளித்த பேட்டியின் விவரம்: அரசு அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இரண்டாவது டோஸ் கட்டாயமாக போடவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மூன்றாவது அலையைத் தடுக்க தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசை வலியுறுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்க பயணிகளுக்கு டெஸ்ட்

    தென்ஆப்பிரிக்க பயணிகளுக்கு டெஸ்ட்

    மேலும், தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் விமானப் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானால் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கடந்த 15 நாட்களில் கர்நாடாகாவிற்குள் நுழைந்த மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளுக்கும் மீண்டும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    7வது நாளில் மீண்டும் கோவிட் டெஸ்ட்

    7வது நாளில் மீண்டும் கோவிட் டெஸ்ட்

    கேரளாவில் இருந்து வரும் மாணவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் இருந்தாலும், 7 வது நாளில் மீண்டும் கோவிட் டெஸ்ட் எடுக்கவேண்டும். இந்த உத்தரவு கடந்த 16 நாட்களில் வந்த கேரள மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கர்நாடாகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நர்சிங் கல்லூரியில் 12 மாணவர்களுக்கும், தார்வாட்டில் உள்ள எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் 281 மாணவர்களுக்கும் கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்த எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரி கோவிட் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சனிக்கிழமை 402 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 6 பேர் உயிரிழந்தனர். 6,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் இதுவரை 29,94,963 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    English summary
    Karnataka has stepped up COVID-19 precautionary measures in the state amid a rise in cases and worries over new strain Omicron. Screening of international passengers at the airports will be intensified and RT-PCR tests will now be mandatory for visitors from Maharashtra and Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X