பிரஜ்வல் ஆஜராகும் வரைக்கும்.. ம்ஹூம் அங்கேயே தூக்கும் கர்நாடகா சிஐடி போலீஸ்.. அலெர்ட்டில் ஏர்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வெளிநாட்டில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கிய உடனேயே ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யப் போவதாக கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3000 ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியவர் ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் தற்போது தேர்தலில் போட்டியிட்டவருமான பிரஜ்வல் ரேவண்ணா. பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் இருக்கிறது.

lok sabha election 2024 prajwal revanna 2024


ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு முன்னதாகத்தான் 3,000 ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. பல நூறு பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பெரும் பிரளயத்தைக் கிளப்பிவிட்டிருக்கின்றன.

கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு இது தொடர்பாக விசாரணை நடத்தும் முன்னரே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டைவிட்டு தப்பி ஓடினார். பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ரேவண்ணாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி இருக்கிறது கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் பிரஜ்வல் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தாம் மே 31-ந் தேதி இந்தியா திரும்புவதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராகப் போவதாகவும் கூறியிருந்தார். இது கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது.

தற்போது பிரஜ்வல் ரேவண்ணா, முனீச் நகரில் இருந்து பெங்களூர் வருவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல ஏற்கனவே துபாயில் இருந்து மங்களூர் வரப் போகிறார், பெங்களூர் வரப் போகிறார் என் கூறப்பட்டது. 2 முறை இந்தியாவுக்கு டிக்கெட் புக்கிங் செய்த பிரஜ்வல் அப்போது நாடு திரும்பவில்லை. தற்போது பிரஜ்வல், பெங்களூர் திரும்புவார் என்பது எதிர்பார்ப்பு.

அப்படி பிரஜ்வல் பெங்களூர் திரும்பியதும் விசாரணைக்கு வருவார் என தாங்கள் காத்திருக்கமாட்டோம்; பெங்களூர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர் கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+