கர்நாடகாவை உலுக்கிய திடீர் மாரடைப்பு மரணங்கள்.. இனி பிரேத பரிசோதனை கட்டாயம்- மாநில அரசு அதிரடி முடிவு
பெங்களூர்: கர்நாடகாவில் ஹசான் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் இளைஞர்கள் என்பதால் இந்த விவகாரம் பூதாரகமாகியுள்ளது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் நிழ்ந்த மாரடைப்பு மரணங்கள் குறித்து ஆராய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வருகிற 10 ஆம் தேதி அரசுக்கு அறிக்கை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம் எனவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஹசான் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர்களுக்கு எந்தவொரு இணை நோய்களும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இது தொடர்பாக 10 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த திடீர் மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் சித்தராமையா கூறியிருந்தார். எனினும், இதனை திட்டவட்டமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்து இருந்தது. இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தால் அவர்களது உடலை கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசு அதிரடி நவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தலை கர்நடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வெளியிட்டுள்ளார். தினேஷ் குண்டுராவ் பெங்களூரில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாரடைப்பு ஏற்படுவது, கொரோனா பாதிப்பால் உடல்களில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய டாக்டர் ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை தினேஷ் குண்டுராவ் பெற்றுக் கொண்டார். பின்னர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் உயர்ந்துள்ளது கவலை அளிக்கிற்து. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை என்னிடம் கொடுத்துள்ளது.. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்புகள் சற்று உயர்ந்துள்ளது உறுதி செய்துள்ளது.
ஆனால் கொரோனா தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் அதிகரித்துள்ளது. மாரடைப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை முறையும் மாரடைப்புக்கு காரணம் என்று குழு கூறியுள்ளது.
இந்த மாரடைப்பு மரணங்களை தடுக்க அரசு முக்கிமயான முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மருத்துவமனை தவிர்த்து பிற இடங்களில் நிகழும் மரணங்கள் விஷயத்தில் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் உயிரிழப்புக்கு சரியான காரணம் என்ன என்பது தெரியவரும்" என்றார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications