மத்திய பாஜக அரசு சட்டத்துக்கு எதிர்ப்பு- கர்நாடகாவில் 3-வது நாளாக லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!
பெங்களூர்: மத்திய பாஜக அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்தில் லாரி ஓட்டுநர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடருகின்றனர். கர்நாடகாவில் லாரி ஓட்டுநர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் கடும் தேக்கமடைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய சட்டமானது விபத்தை ஏற்படுத்தும் லாரி ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ7 லட்சம் அபராதமும் விதிக்க வகை செய்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்த உடனேயே வட இந்திய மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அப்போது மத்திய அரசு இந்த , சட்டவிதிகளை நிறுத்தி வைப்பதாக கூறியது. ஆனாலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசின் இப்புதிய சட்டத்துக்கு எதிராக கர்நாடகா மாநிலம் முழுவதும் ஜனவரி 17-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கர்நாடகா முழுவதும் 3 நாட்களாக பல லட்சக்கணக்கான லாரிகள் இயங்கவில்லை. கர்நாடகாவில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் கர்நாடகா மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி உள்ள ஓட்டுநர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தும் லாரிகள் இயக்கப்படவில்லை. மத்திய அரசு புதிய சட்டத்தை திரும்பப் பெறும் வரை லாரிகளை இயக்கமாட்டோம் என லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் அத்திப்பள்ளி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் உள்ள வாகன சோதனை சாவடிகள், டோல்கேட் ஆகியவற்றை 7 கிமீ தொலைவாக அமைக்க வேண்டும் என்பதும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது கர்நாடகா மக்களின் கோரிக்கை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications