Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் திறக்கப்படும் கோலார் தங்க வயல்! அது சரி முதலில் KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா! உண்மை இதுதான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க வயலை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இங்கிருந்து மீண்டும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவின் தங்கப் புதையலாகக் கருதப்பட்ட கே.ஜி.எஃப் முதலில் மூடப்பட என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!

கர்நாடக தலைநகர் பெங்களூருவிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க வயல் அமைந்துள்ளது. இந்தச் சுரங்கத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. இங்கு ஆங்கிலேயர்கள் தான் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். ஆனால், கேஜிஎப்-இல் தங்க வேட்டை அதற்கு முன்பே தொடங்கியதாகத் தெரிகிறது.

KGF gold karnataka

கேஜிஎஃப் வரலாறு

1700களில் இருந்தே இங்குத் தங்கத்தை எடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டுவிட்டது. இதைப் பிரிட்டிஷ் அதிகாரி ஜான் வாரனின் தான் எழுதிய ரிப்போர்ட்டில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினப் போரில் திப்பு சுல்தானைக் கொன்ற பிறகு, ஆங்கிலேயர்கள் முழுப் பேரரசையும் மைசூர் மகாராஜாவிடம் ஒப்படைத்தனர். ஆனால் கோலாரில் உள்ள இந்த தங்க வயல்களின் மொத்த உரிமைகளை மட்டும் பிரிட்டிஷ் அரசே வைத்துக் கொண்டது.

பிரிட்டிஷ் அராஜகம்

அப்போது முதல் கோஜிஎப் வயலில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணி தொடங்கியது. அதற்கு முன்பும் இந்திய மன்னர்கள் தங்கத்தை வெட்டி எடுக்க முயன்ற போதிலும், தேவையான உபகரணங்கள் இல்லாததால் இந்திய மன்னர்களால் அதைச் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயர்களாலும் கூட அப்போது பணிகளைத் தொடர முடியவில்லை. இடையில் சில காலம் கேஜிஎஃப் மூடப்பட்டும் இருந்தது. 1880 முதல் தான் கேஜிஎப் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது. பிரிட்டிஷார் இங்கிருந்து சுமார் 900 டன் தங்கத்தை வெட்டி எடுத்துள்ளனர்.

பிரிட்டிஷார் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூடச் செய்து தரவில்லை. இதனால் பல தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரிட்டிஷ் கொடுமையால் சுமார் 6000+ தொழிலாளிகள் உயிரிழந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

கண்ட்ரோலில் எடுத்த இந்தியா

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனாலும் பிரிட்டிஷ் கண்ட்ரோலில் இருந்து கேஜிஎப் தொழிலாளிகள் விடுபடாமலேயே இருந்தனர். அவர்கள் சுதந்திரத்தைச் சுவாசிக்க மேலும் 9 ஆண்டுகள் ஆனது. அதாவது 1956ல் தான் கேஜிஎப்பை விட்டு பிரிட்டிஷ் வெளியேறியது. இதையடுத்து மாநில அரசு கேஜிஎப் நிர்வாகத்தைக் கண்காணித்து வந்தது.

1972ம் ஆண்டு கேஜிஎஃப்-ஐ நிர்வகிக்க பாரத் கோல்ட் மைன்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆண்டுகள் செல்ல செல்ல கேஜிஎப்-ஐ இயக்கும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போனது. தங்கத்தை வெட்டி எடுக்க மிகவும் ஆழமாகச் செல்ல வேண்டி இருந்தது. 1900களின் தொடக்கத்தில் 1 கிமீ ஆழத்தில் இருந்த தங்கம், 1980களில் 3 கிமீ ஆழத்தில் தான் கண்டெடுக்கப்பட்டது.

கேஜிஎஃப் மூடப்பட என்ன காரணம்

இப்படித் தங்கத்தை வெட்டி எடுக்கும் ஆபரேடிங் செலவுகளே தாறுமாறாக அதிகரித்தது.. ஆனால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து கொண்டே போனது. இடையில் இந்த தங்க வயல்களில் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தனியார் நிறுவனத்திடம் விற்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அதில் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. ஆண்டுகள் செல்ல செல்ல நிலைமை மோசமாகிக் கொண்டே போனது.

ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎஃப்-ல் தொடக்கத்தில் ஒரு டன் தாதுவுக்கு 45 கிராம் தங்கம் கிடைத்தது. ஆனால் இறுதியில் ஒரு டன் தாதுவுக்கு வெறும் 3 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் கேஜிஎஃப்-இல் தொடர்ந்து ஆபரேட் செய்தால் நஷ்டம் அதிகரிக்கும் சூழலே இருந்தது. இதன் காரணமாகவே கேஜிஎப்-ஐ மூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2001ல் இது மூடப்பட்டது.

மீண்டும் திறக்கப்படும் கேஜிஎப்

இந்தச் சூழலில் தான் கேஜிஎஃப் மீண்டும் திறக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை 3 கிமீ ஆழத்திற்கு சென்றெல்லாம் தங்கத்தை எடுக்கப் போவதில்லை. இதற்கு முன்பே வெளியே எடுத்துக் கொட்டப்பட்ட தாதுகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிராசஸ் செய்யப் போகிறார்கள். இதன் மூலம் செலவு குறையும் அதேநேரம் அதிக தங்கமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+