‛லெஸ்பியன்’ உறவு! கல்லூரி விடுதியில் நடந்த தகராறு.. மாணவியை பிளேடால் வெட்டிய தோழி..அதிர்ச்சி காரணம்
பெங்களூர்: கர்நாடகாவில் கல்லூரி விடுதியில் ‛‛லெஸ்பியன்'' உறவில் மாணவிகள் 2 பேர் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவியை அவரது தோழி பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரெ டவுன் வித்யாநகர் அருகே தனியாருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வெளிமாவட்ட மாணவிகள் கல்லூரியில் படிக்கும் நிலையில் அவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இந்த விடுதி மாணவிகள் தங்கி தினமும் கல்லூரி சென்று வருகின்றனர்.

தோழிகள்
இந்த விடுதியில் சிக்கமகளூர் மாவட்டம் கடூரை சேர்ந்த லாவண்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தங்கி படித்து வருகிறார். இதேபோல் தாவணகெரேயை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர்.

பழிவாங்க திட்டம்
இருப்பினும் ரத்னா, லாவண்யாவின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து இன்னொரு பெண்ணுடன் அவர் பேசியுள்ளார். இதனால் ரத்னா மீது லாவண்யா கடும் கோபமடைந்தார். மேலும் ரத்னாவை பழிவாங்க அவர் முடிவு செய்தார். அதன்படி விடுதியில் இருந்த ரத்னாவை, லாவண்யா தாக்கினார்.

பிளேடால் வெட்டி கொடூரம்
அதோடு ரத்னாவின் உடலில் பிளேடு கொண்டு வெட்டினார். கழுத்து, முகத்தில் பிளேடால் அறுத்த நிலையில் வலி தாங்க முடியாமல் ரத்னா கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பிற மாணவிகள் ஓடிவந்தனர். பயந்துபோன லாவண்யா தனது கையையும் பிளேடால் வெட்டிக்கொண்டார். இதையடுத்து சக மாணவிகள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி கைது
இதுபற்றி அறிந்ததும் வித்யாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். லெஸ்பியன் ஜோடிகளாக லாவண்யா, ரத்னா ஆகியோர் இருந்ததும், இதில் ரத்னா இன்னொருவருடன் நெருங்கி பேசி வந்ததால் ஆத்திரமடைந்த ரத்னா அவரை பழிவாங்க பிளேடால் வெட்டியதும் தெரியவந்தது. இதுபற்றி தாவணகெரே மாவட்ட எஸ்பி ரிஷ்யாந்த் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக வித்யாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் பிளேடால் அறுத்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார். அதன்படி சம்பவம் குறித்த புகாரின் பேரில் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications