பெங்களூரில் குறைந்த விலையில் வீட்டுமனைகள்.. மொத்தமாக கோடிகளில் ஏமாந்த சின்னத்திரை நடிகர், நடிகைகள்
பெங்களூர்: கர்நாடக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் சஞ்சீவ் தகடூர் என்பவர் தனக்கு தெரிந்த கட்டுமான நிறுவனர் மூலம் குறைந்த விலையில் வீட்டுமனை பெற்றுத்தருவதாக சின்னத்திரை நடிகர் சங்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனை நம்பி 139 பேர் ரூ.1 கோடியே 60 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் குறைந்த விலையில் வீட்டுமனைகள் கிடைக்கவில்லை.. மாறாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் மொத்தமாக ஏமாந்துள்ளனர்.
கர்நாடக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் சஞ்சீவ் தகடூர் என்பவர் சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் குறைந்த விலையில் வீட்டு மனை கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் தனக்கு தெரிந்த கட்டுமான நிறுவனர் மூலம் குறைந்த விலையில் வீட்டுமனை பெற்றுத்தருவதாகவும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார்.

மேலும் சஞ்சீவ் தகடூர் கட்டுமான நிறுவனர் பகீரதா என்பவரை அறிமுகம் செய்து வைத்தாராம். அதன்பேரில் சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 139 பேர் ரூ.1 கோடியே 60 லட்சத்தை பல்வேறு தவணைகளில் கட்டுமான நிறுவனர் பகீரதா மற்றும் சஞ்சீவ் தகடூர் மற்றும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த குருபிரசாத், ரவீந்திரா, உமாகாந்த் ஆகியோரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கட்டுமான நிறுவனத்தினர், பெங்களூர் அருகே தாவரகெரேவில் நிலம் வாங்கி இருப்பதாகவும், அதை வீட்டுமனைகளாக பிரித்து கொடுப்பதாகவும் அப்போது நம்பிக்கையாக கூறினார்களாம். இதையடுத்து ராஜராஜேஸ்வரிநகர் துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் சென்று தங்களுக்கான வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வது குறித்து விசாரித்துள்ளார்கள்.
அப்போது தான் கட்டுமான நிறுவனர் பகீரதா, சஞ்சீவ் தகடூர், குருபிரசாத், ரவீந்திரா மற்றும் உமாகாந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து வீட்டுமனை வழங்குவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் சங்கத்தினர், பகீரதா உள்பட 5 பேரையும் தொடர்பு கொள்ள முயன்றனர். அப்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. அதையடுத்து பணத்தை கொடுத்து ஏமாந்த நடிகர், நடிகைகள் உள்பட 139 பேரும் ராஜராஜேஸ்வரிநகர் போலீசில் நடந்த சம்பவத்தை விவரமாக கூறி புகார் செய்தனர். அதன்பேரில் பெங்களூர் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications