ட்ரஸ் ஒழுங்கா போடலைன்னா ஆசிட் ஊத்துவேன்.. பெண்ணிடம் திமிர்த்தனம் செய்த ஊழியரை டிஸ்மிஸ் செய்த கம்பெனி
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிகித் ஷெட்டி என்பவர் பெண் ஒருவர் அணியும் ஆடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரது கணவரிடம், ‛‛தவறான உறவில் பிறந்தவனே.. கர்நாடகாவில் உன் மனைவியை நல்ல ஆடை அணிய சொல். இல்லாவிட்டால் அவள் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்'' என மிரட்டினார். இதுபற்றிய புகாரை தொடர்ந்து நிகித் ஷெட்டியை தனியார் நிறுவனம் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
பெங்களூரில் Etios Digital Services எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நிகித் ஷெட்டி என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் பெண் ஒருவரின் ஆடை தேர்வை விமர்சனம் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த பெண்ணுக்கு சோஷியல் மீடியா மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். சோஷியல் மீடியா மூலம் முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டி அச்சுறுத்தி உள்ளார். இதுபற்றி நிகித் ஷெட்டி அவரது கணவர் சபாஷ் அன்சாருக்கு வலைதளத்தில் மெசேஜ் செய்துள்ளார்.
அதில், ‛‛ஹே தவறான உறவுக்கு பிறந்தவனே. கர்நாடகாவில் உன் மனைவியை நல்ல உடை அணிய சொல். இல்லாவிட்டால் அவள் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன்'' என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சபாஷ் அன்சார் தனது எக்ஸ் பக்கத்தில் நிகித் ஷெட்டியின் போட்டோவை பதிவிட்டு போலீசில் புகாரளித்து இருந்தார்.
அந்த பதிவில்,‛‛இந்த நபர் எனது மனைவியின் ஆடை தேர்வு குறித்த விஷயத்தில் தலையிட்டு அவரது முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் கர்நாடகா டிஜிபி, கர்நாடகா முதல்வர், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்களை டேக் செய்திருந்தார். இந்த பதிவை அவர் கடந்த 9 ம் தேதி செய்திருந்தார்.
அதோடு இன்னொரு பதிவில் சபாஷ் அன்சார், ‛‛எனது மனைவி மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்த நபரை அவர் பணியாற்றும் இடியோஸ் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது'' என கூறியிருந்தார். மேலும் நிகித் ஷெட்டியின் லிங்க்ட்இன் பக்கத்தின் ஸ்கிரின்ஷாட்டை அவர் பகிர்ந்து இருந்தார்.
இதையடுத்து நிகித் ஷெட்டி மீது அவர் பணியாற்றும் நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அதாவது பெண்ணின் ஆடை தேர்வு விஷயத்தில் தலையிட்டு ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்த நிகித் ஷெட்டியை பணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்தது. இதுபற்றியும் சபாஷ் அன்சர், ‛‛எனது மனைவி மீது ஆசிட் ஊற்றுவதாக கூறிய நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த நபர் மீது அவர் பணியாற்றிய நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி'' என கூறியுள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications