ஒரே ஒரு "டெக்ஸ்ட் மெசேஜ்".. அப்படியே "ஸ்டன்" ஆன விமானம்.. பதறிய பயணிகள்.. 6 மணி நேரம் போச்சே!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் தவறுதலாக எழுப்பப்பட்ட வெடிகுண்டு சர்ச்சையால் மும்பை செல்லும் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கடந்த சில நாட்களாக விமான சேவைகளில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமுள்ளன. இதனையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இது குறித்து எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் காவல்துறையினர் கைது நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

மங்களூரூ விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல இன்டிகோ விமானம் தயார் நிலையில் இருந்தது. அந்த சமயம் பார்த்து பயணி ஒருவர் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த சக பயணியின் வாட்ஸ்அப் செய்தியை எதிர்பாராமல் படித்துள்ளார். மற்றவருடனான அந்த சாட்டிங்கில் சக பயணி தன்னை ஒரு ('bomber') வெடிகுண்டு வைத்திருக்கும் நபர் என குறிப்பிட்டுள்ளார். நம்மாளுங்க வண்டியில பூனை குறுக்கால போனாலே அரை மணிநேரம் கழிச்சதான் போக வேண்டிய இடத்திற்கு கிளம்புவார்கள்.
அப்படி இருக்க பக்கத்து சீட்டு இருக்குறவங்க கிட்ட வெடிகுண்டு இருக்குன்னு சொன்னா மனசு என்னா துடி துடிச்சு இருக்கும்? அதே துடிப்புடன் வாட்ஸ்அப் சேட்டை நோட் செய்த பெண் பயணி விமான கேபின் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் ஆஹா இன்னைக்கு நம்ம விமானத்துல ஒரு சம்பவம் இருக்குன்னு வானத்துக்கு விட வேண்டி வண்டிய மறுபடியும் குடோவுனுக்கே விட்டுட்டாங்க. அப்புறம் என்ன? உள்ள இருந்த 186 பேரையும் இறக்கி 'பேக காட்டு, செல்போன காட்டுன்னு' எல்லாத்தையும் ரீ-செக் பண்ண ஆரமிச்சுட்டாங்க.
சரி அந்த டெக்ஸ்ட் பண்ணின கருப்பு ஆட்டை பிடித்து விசாரிப்போம் என பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். விசாரணையில் அது கருப்பு ஆடு இல்ல காதல் ஆடுன்னு தெரிய வந்து இருக்கு. அட ஆமாங்க இந்த ரோமியா, தனது ஜூலியட்டுக்கு விளையாட்டாக சில மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதில்தான் இந்த 'bomber' எனும் வார்த்தை வந்துள்ளது. விஷயம் என்னவெனில், இந்த நபரின் காதலி இதே விமான நிலையத்தில் பெங்களூருவுக்கு செல்ல வந்திருக்கிறார். அவரை ஏமாற்ற இந்த பயணி இவ்வாறு கூறியுள்ளார்.
கடைசியில் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னர் 185 பயணிகள் மீண்டும் அதே விமானத்தில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து இதற்கு காரணமான நபர் மட்டும் அந்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. சமீப நாட்களாக விமான கோளாறுகள் குறித்த பிரச்னைகள் தொடர்ந்து மேலெழுந்து வந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகளை DGCA விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் கார்களுக்கு அனுமதி மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதம்- பரபரப்பு