‛‛மசாஜ் பார்லரில் விபசாரம்’’.. தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளம்பெண்கள்.. அதிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண்களை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபசாரத்தில் தள்ளிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 7 தாய்லாந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. பிரபல ஐடி நிறுவனங்கள் உள்ப பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வேலைக்காக பெங்களூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தாய்லாந்தை சேர்ந்த 7 இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பெங்களூர் எலகங்கா நியூ டவுனில் ‛ரோரா லக்சரி தாய் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் பார்லர் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடக்கிறது. வாடிக்கையாளர்கள் போல் வரும் நபர்கள் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவித்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் பார்லரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் ஆஞ்சநேய கவுடா மற்றும் ஹரீஸ் என்பது தெரியவந்தது. மேலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மீட்கப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தாய்லாந்தில் வேலை செய்த வந்த அவர்களை நல்ல சம்பளத்தில் பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஒரு கும்பல் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் சுற்றுலா விசா மற்றும் தொழில்முறை விசாவில் பெங்களூர் வந்துள்ளனர்.
அதன்பிறகு அவர்களை அந்த கும்பல் விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. மீட்கப்பட்ட 7 தாய்லாந்து இளம்பெண்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தொடர்புடையவர்களை பிடிக்கும் முனைப்பில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications