ஹலால் பிரச்சினையை கண்டுகொள்ளாத மக்கள்.. கறிக் கடைகளில் அலைமோதிய கூட்டம்.. விற்பனை ஜோர்
பெங்களூர்: ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளுக்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்றைய தினம் இறைச்சிக் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது.
கர்நாடகாவில் முஸ்லீம் நடத்தும் இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹலால் இறைச்சிகளை இந்துக்கள் வாங்கக் கூடாது என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.
அதற்கு பதிலாக இந்து வியாபாரிகள் நடத்தும் இறைச்சிக் கடைகளில் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் ஹலால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஹலால் உணவு
ஹலால் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்கள். தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகைக்கு மறுநாள் இந்துக்கள் இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. இதனால் இந்துக்கள் ஹலால் இறைச்சியை வாங்குவார்களா அல்லது புறக்கணிப்பாளர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

யுகாதி பண்டிகை
இந்த நிலையில்தான் யுகாதி பண்டிகை கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதன் பிறகு இறைச்சிகயை வாங்குவதற்காக அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதலேயே நீண்ட வரிசையில் இறைச்சி வாங்க காத்திருந்தனர். பெங்களூருவில் பேடராயனபுரா உள்பட 3 இடங்களில் இந்துக்கள் தற்காலிகமாக இறைச்சி கடை அமைத்து இருந்தனர்.

விற்பனை
அங்கும் இறைச்சி விற்பனை ஜோராக இருந்தது. கடைகளுக்கு வர இயலாத வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் இறைச்சியை வாங்கினர். பெங்களூருவில் ஸ்ரீராம்புராவில் இறைச்சிக் கடையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 45 ஆண்டுகளாக இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது.

1000 கிலோ மட்டன் விற்பனை
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் இறைச்சிகள் ஹலால் செய்யப்படுகிறதா, அல்லது மின்சார ஷாக்கில் துண்டிக்கப்படுகிறதா என்பது எங்களுக்கு தெரியாது. இந்த கடையில் இறைச்சிகள் நன்றாக இருக்கும். எங்களுக்கு ஹலால் செய்வதா கரன்ட் ஷாக்கா என்பெதெல்லாம் முக்கியம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு தரமான இறைச்சியை கொடுக்க வேண்டும் என்றார். இந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், நேற்றைய தினம் 1000 கிலோ மட்டன் விற்று தீர்ந்தது என்றார். கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சினை தலைதூக்கி வந்த நிலையில் தற்போது ஹலால் பிரச்சினை துளிர்க்க தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications