ரேபிடோ ஆட்டோவில் நள்ளிரவு 12 மணிக்கு தனியாக பயணம் செய்த பெண்.. உள்ளே பார்த்ததுமே? மனதை வென்ற சம்பவம்
பெங்களூர்: ரேபிடோ ஆட்டோவுக்கு வரவேற்பு கிடைத்தபடி உள்ளது.. குறைவான கட்டணம், டிராபிக்கில் சிக்காமல் செல்லுதல், ஸ்மார்ட்போன் மூலம் எளிதாக புக்கிங் செய்து கொள்வது, அவசரத் தேவைகளுக்கு பயன்படுவது என பல வசதிகள் உள்ளன.. எனினும், பைக் டாக்ஸிகளை போலவே பாலியல் புகார்கள் ரேபிடோ ஆட்டோவிலும் நடப்பதாக புகார்கள் மலிந்து வருகின்றன. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தன்னுடைய ரேபிடோ ஆட்டோ பயணம் குறித்த தன்னுடைய அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஒரேயொருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய அளவுக்கு வசதியாக பைக் டாக்சிகள் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன..

எனினும், பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. பாலியல் சீண்டல்கள் குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பைக் டாக்சிகள் மூலமாக நடப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
சென்னை மதுரவாயல் - பைக் டாக்ஸி
சென்னை மதுரவாயலில் கடந்த மாதம்கூட ஒரு சம்பவம் நடந்தது.. வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், அவசர காரியமாக தன்னுடைய உறவினரை சந்திக்க பள்ளிக்கரணைக்கு இரவு நேரத்தில் பைக் டாக்ஸியில் சென்றுள்ளார்.
ஆனால், அந்த டிரைவர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கை ஓட்டிச்சென்று, மிக மோசமான அளவுக்கு பாலியல் தொல்லைகளை தந்துள்ளார்.. இதனால் அப்பெண் கடுமையாக போராடி கதறி அழுதுள்ளார்.. உடனே அந்த டிரைவர் பைக்கை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்... பிறகு தேனி மாவட்டம் ஓடைப்பட்டி தாலுக்காவை சேர்ந்த 22 வயது சிவக்குமார் என்ற அந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். .
ரேபிடோ ஆட்டோ
இதுபோன்ற பாலியல் புகார்கள் பெங்களூருவில் அதிகமாகி கொண்டிருக்கின்றன.. சில மாதங்களுக்கு பைக்கில் அதிவேக சென்றதை தட்டிக்கேட்ட காரணத்தால், பெண் ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவரால் தாக்கப்பட்ட நிகழ்வும் உண்டு.
ரேபிடோ ஆட்டோவிலும் இதே நிலைமைதான். விரைவான, மலிவான பயணம், ட்ராஃபிக்கில் நேரத்தை சேமித்தல் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் பல இருந்தாலும், பாலியல் புகார்கள் ரேபிடோ ஆட்டோவிலும் பெருகி வருகின்றன..
நள்ளிரவு 12 மணி வீடியோ
இந்நிலையில், பெங்களூருவில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. நள்ளிரவில் ஒரு இளம் பெண் ரேபிடோ ஆட்டோவில் வீட்டிற்கு பயணித்தபோது தனக்கு நேர்ந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார்..
அதில், "நள்ளிரவு 12 மணி ஆகிறது.. நான் ரேபிடோ ஆட்டோவில் தனியாக பயணம் செய்கிறேன்.. இந்த ஆட்டோவில் எழுதியிருக்கும் வாசகத்தை படித்த பிறகு, இந்த பயணம் தைரியமானதாக மாறியது. .. நான் இன்னும் வசதியாக பயணிக்கிறேன்" என்று அப்பெண் பதிவிட்டிருந்தார்.
தந்தை, சகோதரன்
இதை பார்த்த இணையவாசிகள் ஒரு கணம் ஆச்சரியப்பட்டார்கள்.. பிறகுதான் வீடியோவில், அந்த பெண் பயணித்த ஆட்டோவில் எழுதி வைத்திருந்த வாசகத்தை உற்று பார்த்தனர்.. அதில், "நானும் ஒரு தந்தை, ஒரு சகோதரனும் கூட. உங்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். வசதியாக உட்காருங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது..
@littlebengalurustories என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து இந்த வீடியோ பதிவானதுமே, மில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளியது.. வீடியோவை பார்த்த இணையவாசிகளும், ஆட்டோ டிரைவரின் மனிதநேயத்தையும், பொறுப்புணர்வையும், எக்கச்சக்கமாக பாராட்டி கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..
மனதை வென்ற வாசகம்
அதில் ஒரு வாசகர், "இந்த பெங்களூரை 20 வருஷமாக பார்த்து வருகிறேன். இது அனைவருக்கும் பாதுகாப்பான நகரம்" என்று தெரிவித்துள்ளார்.. இன்னொருவரோ, "இது போன்ற சின்ன சின்ன முயற்சிகள் தான் பெண்கள் இரவில் தாமதமாக பயணம் செய்யும்போது பாதுகாப்பாக உணர உதவும்... இதுதான் நமக்குத் தேவையான மாற்றம்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் இந்த வீடியோவானது, மனிதநேயமும் பொறுப்புணர்வும் இன்னும் நம்மிடம் உயிருடன் இருக்கின்றன என்பதை நினைவூட்டி கொண்டிருக்கிறது...!!!
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications