Mobile Ban: 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை? கர்நாடகா அரசு பச்சைக்கொடி... விரைவில் அமல்
பெங்களூர்: கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி செல்போன் பயன்படுத்தவே தடை விதிப்பது பற்றி அம்மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக துணைவேந்தர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதை அனைவரும் வரவேற்றனர். இதனால் விரைவில் கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா உயர் கல்வி கவுன்சில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதலைமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது தான் கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கலாமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
அதாவது முதலமைச்சர் சித்தராமையா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள், கைபேசிகளை தடை செய்வது பற்றி மாநில துணைவேந்தர்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இந்த சமயத்தில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை சித்தராமையா சுட்டிக்காட்டினார்.
மேலும் செல்போன்களுக்கு அதீத செல்போன் பயன்பாடு மாணவ-மாணவிகளின் கற்றல், நடத்தை, மனநலனைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டார். முதல்வர் சித்தராமையாவின் இந்த ஆலோசனையை அங்கிருந்த பல துணை வேந்தர்கள் ஆதரித்தனர். அதேவேளையில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறினர். சில தனியார் பள்ளிகளில் செல்போன் வழியாக வீட்டு பாடங்கள் வழங்கப்படுகிறது என்று கூறினர்.
அதற்கு சித்தராமையா அரசு பள்ளி மாணவர்கள் பற்றி எனக்கு கவலை உள்ளது. அவர்கள் செல்போன்களால் தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்று கூறினர். மேலும் இதுபற்றி விரைவில் முதல்வர் சித்தராமையா இறுதி முடிவு எடுக்க உள்ளார். அதன்பிறகு கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறதா? இல்லையா? என்பது தெரியவரும்.
முன்னதாக கடந்த சட்டசபை கூட்டத்தின்போது 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது பற்றி பரிசீலனை செய்வதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்கா கார்கே தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது முதல்வர் சித்தராமையா ஒருபடி மேலே போய் 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications