Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகமது சிராஜின் நேர்மை.. ஐபிஎல் சூதாட்டத்திற்கு பணம்! மர்ம நபர் மீது பிசிசிஐக்கு பறந்த புகார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உள் ரகசியங்களை வெளியிட்டால் தனக்கு பணம் தருவதாக சொன்னார் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகாரளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஐதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதன்மை பந்துவீச்சாளராகவும் உள்ளார். நடந்து வரும் 2023 ஐபிஎல் தொடரிலேயே குறைவான ரன்களை விட்டுக்கொடுக்கும் வீரராக இவர் உள்ளார்.

 Mohammed Siraj gave complaint to BCCI against the man approach for gambling

இந்திய வீரர்கள் தொடர்ந்து சர்வதேச வீரர்கள் வரை முகமது சிராஜின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். இந்த நிலையில், சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒரு நபர் அனுகியதாக பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவான ஏசியுவுக்கு முகமது சிராஜ் புகாரளித்து உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் அணியின் ரகசியங்களை வெளியில் சொன்னால் தனக்கு பணம் தருவதாக கூறியதாக அவர் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். முகமது சிராஜின் புகாரை பதிவு செய்த பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நபர் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்சி ஓட்டுநர் என்பது தெரியவந்தது. அவர் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தும் புக்கி அல்ல என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டுநர் முகமது சிராஜை தொடர்புகொண்டு அவ்வாறு பேசியது ஏன் எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "முகமது சிராஜை தொடர்புகொண்டு பேசியவர் புக்கி அல்ல. அவர் ஐதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர். போட்டிகளில் பந்தயம் கட்டி விளையாடுபவர். சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்த அவர், அணியின் உள் தகவல்களை தன்னிடம் தெரிவிக்குமாறும் முகமது சிராஜிடம் தொடர்புகொண்டு பேசி உள்ளார். உடனே சிராஜ் எங்களுக்கு புகாரளித்தார்." என்றார்.

அதே நேரம் முகமது சிராஜ் அளித்து இருக்கும் சூதாட்ட புகாருக்கு நடப்பு ஐபிஎல் தொடருக்கும் சம்பந்தமில்லை என்று பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றபோது இது நடந்திருக்கிறது. கடந்த 2022 நவம்பர் மாதம் வாட்ஸ் அப் கால் மூலமாக சிராஜை தொடர்புகொண்ட அந்த ஓட்டுநர், ஆர்சிபி அணியின் விபரத்தையே கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் தனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த முகமது சிராஜ் பிசிசிஐயிடம் புகாரளித்ததன் மூலம் இந்த விசயம் தற்போது அம்பலமாகி உள்ளது. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து தற்போது உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்துவீச்சாளராக உருவெடுத்து இருக்கும் சிராஜின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+