எனக்கு அவர் தான் முக்கியம்! 3 குழந்தைகளை தவிக்க விட்டு பறந்த பச்சைக்கிளி! போலீஸ் கதவை தட்டிய கணவன்!
பெங்களூரு : கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே கள்ளக் காதலனுடன் தனது தாய் தங்களை விட்டு பிரிவதை கண்டு மூன்று குழந்தைகளும் கதறி அழுத நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் அவர் சென்றது போலீசாரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தகவல் தொழில்நுட்பம் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் குடும்ப உறவுகள் சிதைந்து வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்தொற்றுமை இல்லாததன் காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்வது அல்லது வேறு துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களது மனம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனை.

முறையற்ற உறவு
ஆனால் முறையற்ற உறவு திருமணம் தாண்டிய உறவு உள்ளிட்ட பிரச்சனைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. இது இரு நபர் சார்ந்த விவகாரமாக இருந்து இரு குடும்பம் சமூகம் குழந்தைகள் என பலதரப்பட்டோரை பாதிப்பதால் தற்போது இது ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. அந்த வகையில் முறையற்ற உறவால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குஹானியா கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இளைஞருடன் பழக்கம்
அப்பகுதியைச் சேர்ந்த முனீர் அகமது என்பவரது மனைவி தபசம். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரம் செய்து வந்த முனீர் அகமது அடிக்கடி வியாபார வேலையாக வெளியூர் சென்று விடுவது வழக்கம். இதை அடுத்து வீட்டில் தனியாக இருந்த தபசமுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அப்ரார் என்ற 24 வயது இளைஞனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கள்ளக்காதல்
அடிக்கடி இருவரும் சந்தித்து பேசிய நிலையில் இது கள்ளக்காதல் ஆகவும் மாறி இருக்கிறது. அகமது அடிக்கடி வெளியே செல்வதை பயன்படுத்தி அடிக்கடி வீட்டை விட்டு மாயமான தபசம் அப்ராரை சந்தித்து காதலை வளர்த்து வந்திருக்கிறார். நாளடைவில் தனது மனைவியின் போக்கில் மாற்றங்கள் இருப்பதை அறிந்த முனீர் இருவரையும் கண்டித்து இருக்கிறார். ஆனால் இருவரும் அதைக் கேட்காமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து தவசம் திடீரென மாயமானார்.

மாயம்
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கொள்ளேகால் காவல் நிலையத்தில் முனீர் அகமது புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தபசம் நேற்று தனது கள்ளக்காதலன் அப்ராருடன் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது தான் கள்ளக்காதலுடன் தான் செல்வேன் எனவும் கணவர் மற்றும் குழந்தைகள் தனக்கு தேவையில்லை என உறுதியாக தெரிவித்தார்.

குழந்தைகளை தவிக்க விட்டு..
இதையடுத்து விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என போலீசார் எச்சரிக்க விரைவில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக கூறி தனது கள்ளக்காதலனுடன் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். தனது தாய் தங்களை விட்டு பிரிவதை கண்டு மூன்று குழந்தைகளும் கதறி அழுத நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் அவர் சென்றது போலீசாரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.












Click it and Unblock the Notifications