கோர்டுக்கு போன இடத்தில்.. காதலியுடன் "ரூம்" போட்ட கைதி.. காவலுக்கு இருந்த போலீஸ்! அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறை தண்டனை கைதி ஒருவர் தனது தோழியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருக்க காவல்துறையினரே உதவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவர், மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சிறைக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் குற்றவாளியின் தோழி உள்ளிட்டோர் இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பிரபல குற்றவாளியான பச்சா கான் கடந்த 2009ல் நடந்த கொலை வழக்கில் சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது சிறையில் வசித்து வருகிறார். பொதுவாகவே சிறையில் தற்போதெல்லாம் கிடைக்காதது என எதுவும் கிடையாது. செல்போன் முதல் சிகரெட் கஞ்சா என அனைத்தும் கிடைக்கிறது. சிறை நிர்வாகத்தினர் அடிக்கடி இப்பொருட்களை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்வது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.
அதுவும் கர்நாடக மாநில சிறை என்றால் சொல்லவா வேண்டும்? தமிழ்நாட்டின் பிரபல அரசியல் குற்றவாளிக்கு டிவி, படுக்கை என வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாக விமர்சனங்களை எதிர்கொண்டதுதான் இம்மாநில சிறைகள். இருப்பினும் ஆண்கள் சிறைக்குள் பெண்களை அனுமதிப்பது என்பது அவ்வளவு எளிதான விசயம் அல்ல. எனவே குற்றவாளி பச்சா கான் தனது தோழியை காண முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனையடுத்து பச்சா கான், ஹூப்ளியைச் சேர்ந்த இர்பான் கான் என்பவரை கொலை செய்த வழக்கில் தார்வாட் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சரி ஆஜர் ஆனோமா, சிறைச்சாலைக்கு திரும்பினோமா என்று இல்லாமல் பச்சா கானுக்கு 'பொம்ள சோக்கு' கேட்டு இருக்கு. சரி என்ன செய்ய கானும் ஒரு மனுசன்தானே! அப்படினு, குற்றவாளி கானை, சிறைக்கு நேராக அழைத்து வராமல் சுத்தி வருவதைபோல அப்பகுதியில் இருந்த பிரபல லாட்ஜிக்கு வண்டியை திருப்பியுள்ளனர் காவல்துறையினர். கானும் தோழியை காணாத நீண்ட நாள் ஏக்கத்தில் ரூமுக்குள் சென்று பேசிக்கொண்டிருக்க காவல்துறையினர் பாதுகாப்புக்கு வெளியில் நின்றுள்ளனர்.
ஆனால் இது வெளிய தெரியாம இருக்குமா? நம்மை போன்ற ஒரு நேர்மையான பத்திரிகையாளர் ஒருவர் இந்த தகவல்களையெல்லாம் சேகரித்து மேலிடத்திற்கு அனுப்ப, விஷயம் பஸ்ட் ஆகியுள்ளது. குற்றாவளிக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னா அவருடைய தோழிக்கும் சேர்த்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறீர்களா என 3 போலீசார் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மட்டுமல்லாது கோயில் திருவிழாவுல மாமன பார்த்த மாதிரி கோர்டுக்கு வந்தோமா பார்த்தோமானு இல்லாம ரெண்டு பேரும் சேர்ந்து தனியா ரூம் போட்டு இங்கீங்க இல்லையா? அப்படினு பச்சா கானின் தோழியையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தில் 56 வயதான விசாரணைக்கைதி ஒருவருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications