கணவர் தற்கொலை.. மனைவியை வேலையிலிருந்து நீக்குங்கள்! அசெஞ்சருக்கு கடிதம் எழுதிய நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. அவரின் மரணம் காரணமாக.. சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவாகரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லசித்தம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார்.

bangalore

இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார். இதனால் கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவரை போன்றவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது. அவர் பல லட்சங்களில் வருமானம் ஈட்டும் நிலையில் .. கணவரிடம் அவ்வளவு பணம் கேட்டு.. கடைசியில் அவரின் மரணத்திற்கே கூட காரணமாக மாறிவிட்ட நிலையில்.. நிகிதாவை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இணையத்தில் அசெஞ்சர் தற்போது டிரெண்டாகி வருகிறது.

bangalore

என்ன நடந்தது?: அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.

bangalore

மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார், ஆனால் கடைசியில் வரதட்சணைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். சுபாஷின் மனைவியின் தந்தை திருமணமான உடனேயே நோயால் இறந்தார், ஆனால் தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. சட்டம் எந்த வகையிலும் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை என்று கூறி தற்கொலை செய்துள்ளார். அதுல் சுபாஷ் தற்கொலை செய்யும் முன் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க், டிரம்ப் போன்றவர்களை டேக் செய்து இதை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் சட்டங்கள் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் உண்மையில் நீதி கிடைக்க வேண்டிய ஆண்களுக்கும் நீதி கிடைப்பது இல்லை என்று தற்கொலை வீடியோவில் கூறி உள்ளார்.

கடந்த திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷ், 24 பக்க தற்கொலைக் குறிப்பை எழுதி உள்ளார். அதேபோல் கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் அவர் தனது மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். தனது மனைவி நிகிதா சிங்கானியா, நீதிபதி, மனைவியின் குடும்பம் மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+