பிரதமரை கொல்ல சதி! கர்நாடகாவில் 4 பேரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்! ஹிட் லிஸ்டில் டாப் தலைவர்கள்
கர்நாடகாவில் சிலர் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து நிதியளித்து வந்துள்ளனர்.
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பேரணியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பயங்கரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே பாக். எல்லை வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இருப்பினும், எல்லையில் இருக்கும் நமது பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியைத் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.
எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் இப்போது தான் சற்று குறைந்துள்ளது. எல்லை மீறி இந்தியப் பகுதிகள் பயங்கரவாதிகள் நுழைவது மட்டுமின்றி, ஆளில்லாத டிரோன்களையும் அனுப்ப முயல்கின்றனர். இதையும் பாதுகாப்புப் படையினர் வீழ்த்தி வருகின்றனர்.

என்ஐஏ அதிகாரிகள்
அதேபோல நமது நாட்டிலும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே இந்த என்ஐஏ அமைப்பு, கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவில் இருந்து 4 பேரைக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தாகக் கூறி இந்த நான்கு பேரையும் என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது.

4 பேர் கைது
நேற்று மார்ச் 5ஆம் இந்த நான்கு பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பீகார் சென்றிருந்த நிலையில், அந்த பேரணியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இவர்கள் பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முகமது சினான், இக்பால், சர்ஃபராஸ் நவாஸ் மற்றும் நௌஃபல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கிய ஆவணங்கள்
முன்னதாக இவர்களைப் பிடிக்க என்ஐஏ முகமை 4 குழுக்களை அமைத்திருந்தது. பயங்கரவாத அமைப்புகளுக்குச் சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, மத்திய புலனாய்வு அமைப்பினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்தும் பல முக்கிய ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி பேரணி
இவர்கள் கடந்த 2022 ஜூலை மாதம் பிரதமர் மோடி பீகாரில் கலந்து கொண்ட பேரணியில் தாக்குதல் நடத்த நிதி அளித்துள்ளனர். இந்த தாக்குதல் முயற்சியை அவர்களால் செய்ய முடியவில்லை. அப்போதே என்ஐஏ அதிகாரிகளுக்கு இவர்களைப் பற்றித் தெரிந்துவிட்டது. இருப்பினும், அவர்களை உடனடியாக கைது செய்யாமல் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க அவர்கள் 4 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் சில வங்கி ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

டாப் தலைவர்கள்
அந்த ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணியைக் குறிவைத்து பயங்கரவாத செயல்களைச் செய்யப் பீகாரில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு பெரும் தொகையை மாற்றியிருப்பது தெரியவந்தது. இது மட்டுமின்றி நாட்டில் மற்ற பகுதிகளில் இயங்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இவர்கள் நிதியளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல பயங்கரவாத ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் பல டாப் அரசியல் தலைவர்களும் இலக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications