• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொளுத்தி போட்ட இந்துத்துவா.. "இது இந்து கோயில். இந்து வியாபாரி மட்டுமே கடை வைக்கலாம்".. பரபர பேனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: இந்து கோவில்களில் இந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும், இந்துக்கள் இந்து கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பேனரை வைத்து கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர் இந்துத்துவா அமைப்பினர்.. இப்படி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என்று வாய்ப்பில்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லி உள்ளது, அதைவிட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் இந்து கோயில்கள் விவகாரம் அவ்வப்போது தலைதூக்கிவிடும்.. குறிப்பாக, இந்து கோயில்கள் அரசு மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன என்றும், அந்த கோயில்களில் இருந்து வரும் பணத்தை கோயில் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியவில்லை என்றும் புகார்கள் உள்ளன.

சில இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு எதிராக செயல்படுவதால், அரசின் பிடியில் இருந்து இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன..

இந்தியாவை இந்து ராஷ்டிரா என பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சாமியார்கள்! இந்தியாவை இந்து ராஷ்டிரா என பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சாமியார்கள்!

 உறுதிமொழி

உறுதிமொழி

பிற மதங்களின் கோயில்கள் அந்த மதத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, இந்து மதத்தின் கோயில்களும் அவ்வாறு உள்ளூர் நிர்வாகிகள், மடங்கள் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதற்காக தனி சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் கர்நாடகாவில் இந்து கோயில்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படும் நிலை ஏற்படும், இது பாஜகவின் கொள்கை முடிவு, இதனை விரைவில் நிறைவேற்றுவது உறுதி என்று பசவராஜ் பொம்மை பலமுறை தெரிவித்துள்ளார்.

திருவிழா

திருவிழா

இந்நிலையில், திடீரென ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.. இந்து கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்ய இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று இந்துத்துவா அமைப்பினர் பேனர் வைத்துவிட்டார்கள்.. இதுதான் சர்ச்சையை கிளப்பி வருகிறது.. கர்நாடக மாநிலம் தக்கின கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் உள்ளாள பைலு பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அப்போது பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அங்கு வந்துள்ளனர்.

கோவில்

கோவில்

"இந்துக்களுக்கு வியாபாரம் செய்ய மட்டுமே இங்கு அனுமதி.. நம்முடைய கடவுளை வணங்கும் நபர்களிடம் மட்டும் பொருட்களை வாங்க வேண்டும்" என்று எழுதி, கோவிலுக்கு வெளியே ஒரு பேனரை வைத்துள்ளனர்... இந்த பேனரை பார்த்து காங்கிரஸ் கட்சி கொந்தளித்துவிட்டது.. இப்படி பேனர் வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது..

அவமரியாதை

அவமரியாதை

இதுகுறித்து பஜ்ரங்தளத்தின் ஒருங்கிணைப்பாளர் செய்தி நிறுவனத்துக்கு தந்த பேட்டியில், "அங்கு வரும் முஸ்லீம்கள் கோவில் திருவிழாவை அவமரியாதை செய்கிறார்கள்.. பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். பல வருஷமாக அவர்கள் கடைகளை வைத்திருக்கிறார்கள்.. - ஆனால் இந்த முறை, இப்படி ஒரு பேனர் வைத்தபிறகுதான், இந்துக்கள் மட்டுமே கடைகளை அமைக்க முடிந்தது.. போலீசார் பேனர்களை அகற்றிய போதிலும், எங்களுக்கு இது வெற்றிதான்" என்றார்.

காவல்துறை

காவல்துறை

இதனிடையே, இந்த பேனர் விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ள நிலையில், தக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி, இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டுவது குற்றமாகாது என்று சொல்லி உள்ளார்.. எஸ்சிஎஸ்டிகளுக்கு பாரபட்சமாக அல்லது வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் கீழ் சமூக பாகுபாடுகளுக்கு என பல பிரிவுகள் உள்ளன. பேனர் வைத்து, அதனால் விரும்பத்தகாத சம்பவத்தை ஏற்படுத்தினால், அது துணை குற்றச்சாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்றார்..

வியாபாரம்

வியாபாரம்

நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி சொல்வது அதிர்ச்சியை தந்துள்ளது. இதுவரை புகைந்து கொண்டிருந்த விஷயம், இப்போது இந்துத்துவா அமைப்பினரால் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.. இந்து கோவில்களில் இந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும், இந்துக்கள் இந்து கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நூதனமான முன்னெடுப்பு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

English summary
Non Hindus not allowed to trade: Banners in Mangaluru removed, cops say no action possible
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X