நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் உருவம் பொறித்த சமூக நீதி செங்கோல் வழங்க தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த சமூக நீதி பேரவை முடிவு செய்துள்ளது.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி டெல்லியில் அண்மையில் திறந்து வைத்தார். இந்த நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் ஒன்றையும் நிறுவினார் பிரதமர் மோடி. இந்த செங்கோல் குறித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

இந்திய விடுதலையின் போது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தால் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டு அதிகார மாற்றத்தின் குறியீடாக ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் என்பது ஆளும் தரப்பின் கருத்து. ஆனால் இது அப்பட்டமான கட்டுக் கதை; திருவாவடுதுறை ஆதீனம் தங்களை தற்காத்துக் கொள்ள நேருவிடம் கொடுத்ததாக சொல்லிக் கொள்கிற; பத்திரிகைகளில் காசு கொடுத்து விளம்பரம் செய்ததுதான் செங்கோல் கதை என்கிறது எதிர்க்கட்சித் தரப்பு. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.
இதற்கு பதிலடியாக சமூக நீதி பேசுகிற கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியாரின் உருவம் பொறித்த சமூக நீதி செங்கோல் வழங்க மதுரையை சேர்ந்த சமூக நீதிப் பேரவை முடிவு செய்துள்ளது. இந்த செங்கோலை இந்த அமைப்பின் 30 பேர் கொண்ட குழு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் வழங்க உள்ளது.
இந்த செங்கோலும் தங்க முலாம் பூசப்பட்டதுதானாம். இந்த செங்கோலை வழங்கி சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என மதுரை அமைப்பினர் சித்தராமையாவிடம் கோரிக்கை வைக்கின்றனராம்!
செங்கோல்! செங்கோல்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications