‛ஆபாச வீடியோ’ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது.. நள்ளிரவில் பெங்களூர் ஏர்போர்ட்டில் தூக்கிய போலீஸ்
பெங்களூர்: 300க்கும் அதிகமான பெண்களை ஆசைக்கு இணங்க வைத்து 3,000 ஆபாச வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்திறங்கியவரை விமான நிலையத்தில் வைத்து எஸ்ஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியில் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 26-ந் தேதி ஹாசன் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. பிரஜ்வல் ரேவண்ணா ஓட்டளித்தார். அதன்பிறகு அவர் ரகசியமாக ஜெர்மனிக்கு பறந்தார்.

அதாவது பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் பரவிய நிலையில் அவர் வெளிநாடு சென்றார். சுமார் 300க்கும் அதிகமான பெண்களை கட்டாயப்படுத்தி அவர் ஆசைக்கு இணங்க வைத்து ஆபாச வீடியோ கால் பேசியுள்ளார். அதோடு சில பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதோடு இந்த செயல்களை எல்லாம் அவர் வீடியோவாக பென்டிரைவில் சேமித்து வைத்திருந்தார். இந்த பென்டிரைவ் வீடியோக்கள் தான் வெளியாகி கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியது.
இதுதொடர்பாக கர்நாடகா அரசு எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியது. சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா மே 31ம் தேதி பெங்களூர் திரும்புவதாகவும், எஸ்ஐடி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே தான் எஸ்ஐடி போலீசாரின் கைது நடவடிக்கையில் தப்ப அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூர் வந்திறங்கியவுடன் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதன்படி நள்ளிரவு 1 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானத்தில் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
உடனடியாக அங்கு இருந்த எஸ்ஐடி போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் சிஐடி அலுவலகத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இன்றைய தினம் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் எஸ்ஐடி போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையான ரேவண்ணா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கைதுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications