கர்நாடகாவின் ரியல் 'சார்லி 777'... அடர் காட்டில் மயங்கிய உரிமையாளர்.. கெத்தாக மீட்ட வளர்ப்பு நாய்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியில் விறகு எடுக்க காட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்த நிலையில் அவரது வளர்ப்பு நாய் அவரை மீட்க உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் அவருடன் காட்டுக்கு போகும் இந்த 'நாய்' அவர் சென்று வரும் வழியை நன்கு அறிந்திருந்தால் உடனடியாக அவரை கண்டுபிடித்துள்ளது.
வளர்ப்பு நாய் ஒன்று அதன் உரிமையாளரின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அன்றாட வாழ்க்கை
கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் உள்ளது சுடுரு கிராமம். இந்த கிராமத்தில் தனது குடும்பத்துடன் சேகரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அருகில் உள்ள காட்டு பகுதிகளுக்கு சென்று விறகுகளை எடுத்து வருகிறார். பின்னர் பக்கத்தில் உள்ள நகரத்திற்கு சென்று ஓட்டலில் வேலை செய்கிறார். இதுதான் சேகரப்பாவின் வாழ்க்கை. இப்படி இருக்கையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அடர் கருப்பு நிறத்தில் நாய் குட்டி ஒன்று இவரது வீட்டிற்கு அருகே வந்திருக்கிறது.

வீடு திரும்பவில்லை
அன்று ஒருநாள் மட்டும் சேகரப்பா அந்நாய் குட்டிக்கு உணவளித்திருக்கிறார். அப்போதிலிருந்து அந்த நாய் அங்கே இருந்துள்ளது. எவ்வளவு விரட்டியும் அது போகவில்லை. எனவே, சேகரப்பா நாயை 'டாமி' என பெயரிட்டு வளர்க்க தொடங்கினார். இந்நிலையில், நேற்று அவர் காட்டுக்கு விறகுகளை எடுக்க சென்றுள்ளார். விடியற்காலை 6 மணிக்கு சென்றவர் பொழுது புலர்ந்து 10 மணி ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. சரி தாமதமாக வருவார் என்று காத்திருந்த குடும்பத்தினர், நண்பகல் ஆகியும் சேகரப்பா வீடு திரும்பாததால் கலக்கமடைந்தனர்.

டாமி
பின்னர் அக்கம் பக்கத்தில் சொல்லி கிராம மக்களை திரட்டி காட்டை நோக்கி ஓடியுள்ளனர். அப்பகுதி அடர் வனங்கள் நிறைந்த காடு என்பதால் தேடுதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எங்கு தேடியும் சேகரப்பா கிடைக்கவில்லை. எவ்வளவு குரல் கொடுத்தும் பதிலுக்கு அவர் குரல் கொடுக்கவில்லை. அவர் சுள்ளிகளை எடுக்க போகும் வழியும் யாருக்கும் தெரியாது. நேரமும் கடந்துகொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் கிராம மக்களும் கையை பிசைந்துகொண்டு நின்றுகொண்டிருக்க அப்போதுதான் 'டாமி' குரைத்திருக்கிறது.

மீட்பு
இடைவிடாமல், சத்தமாக நீண்ட நேரம் டாமி குரைக்கையில் தேடுதலில் இருந்த மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சேகரப்பா மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதனையில் அவரது உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும், அதீத வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

கர்நாடகா
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகரப்பா, தனது உயிருள்ள வரை 'டாமியை' பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும், தான் காட்டுக்கு போகும்போது டாமி தன்னுடன் வரும் என்பதால் தான் செல்லும் பாதையை டாமி அறிந்து வைத்திருந்து தன்னை காப்பாற்றியுள்ளது எனவும் கூறியுள்ளார். 2 கி.மீ தொலைவில் அடர் வனப்பகுதியில் மயங்கி இருந்த தனது உரிமையாளரை சரியாக கண்டுபிடித்து காப்பாற்றிய நாய் 'டாமியை' பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சிவமொக்கா மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications