"வெயிட் பண்ணுங்க.. நானே கூப்பிடுகிறேன்".. டிகே சிவக்குமாரை தவிர்க்கும் ராகுல்? வாட்ஸ்அப்பில் மெசேஜ்
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டிகே சிவக்குமார் முயற்சிக்கிறார். அதேவேளையில் மறுபுறம் சித்தராமையா முதல்வர் பதவியை தக்க வைக்க முயற்சித்து வருகிறார். இது கர்நாடகா அரசியலை பரபரப்பாக்கி உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியிடம் பேச டிகே சிவக்குமார் கடந்த ஒரு வாரமாக முயன்ற நிலையில், ‛‛வெயிட் பண்ணுங்க.. நானே கால் பண்றேன்'' என ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டிகே சிவக்குமாரை, ராகுல் காந்தி தவிர்க்கிறாரா? அல்லது டிகே சிவக்குமாருக்கு விரைவில் குட்நியூஸ் சொல்கிறாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட முதல்வர் தேர்வு என்பது காங்கிரஸ் மேலிடத்துக்கு அவ்வளவு எளிதாக இல்லை. முதல்வர் பதவியை பிடிக்க சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் சித்தராமையாக முதல்வரானார். காங்கிரஸ் தலைவராக இருக்கும் டிகே சிவக்குமார், துணை முதல்வராக பொறுப்பேற்றார். சித்தராமையா இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை நிறைவு செய்துள்ள நிலையில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
டெல்லி சென்ற டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் இன்னும் காங்கிரஸ் மேலிடம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
இதனால் டிகே சிவக்குமார் விரைவில் முதல்வராவார் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர். அதேவேளையில் மறுபுறம் சித்தராமையா தான் முதல்வராக தொடர்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது அனைவரின் பார்வையையும் கர்நாடகா அரசியல் நோக்கி திரும்ப வைத்துள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஒரு வாரமாக ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள டிகே சிவக்குமார் முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பலனளிக்கவில்லை. இதனால் டிகே சிவக்குமாரை, ராகுல் காந்தி தவிர்க்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கிடையே தான் ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், ‛‛Please wait, I will call you'' என கூறியுள்ளார். அதாவது, ‛‛கொஞ்சம் காத்திருங்கள், நானே உங்களை அழைக்கிறேன்'' என கூறியுள்ளார்.
இது டிகே சிவக்குமாருக்கு சாதகமா? பாதகமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தற்போது கர்நாடகா அரசியல் நிலவரம் பற்றி மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மல்லிகார்ஜூன கார்கே 3 நாள் பயணமாக கர்நாடகா வந்து மீண்டும் டெல்லி திரும்பி உள்ளார். அப்போது சித்தராமையா, அவரை சந்தித்து பேசினார். இப்போது மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ளார்.
டெல்லியில் ராகுல் காந்தி உள்பட பிற தலைவர்களுடன் கர்நாடகா நிலவரம் பற்றி மல்லிகார்ஜூன கார்கே விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இன்று அல்லது நாளை ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதிக்குள் கர்நாடகா முதல்வர் பதவி யாருக்கு என்பதை மேலிடம் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்!












Click it and Unblock the Notifications