தூசு தட்டிய விக்ரம் லேண்டர்.. மாஸாக வெளியேறிய பிரக்யான் ரோவர்! இனி நிலவில் ரவுண்டு -மிரட்டல் போட்டோ
பெங்களூர்: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்த சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் படிந்த நிலவின் தூசுகள் குறைந்து தற்போது பிரக்யான் ரோவர் வெளிவந்து இருக்கிறது.
நிலவிற்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளாக ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் இருந்து வந்தன. இந்த வரிசையில் புதிதாக 4 வது நாடாக இணைந்துள்ளது இந்தியா. கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவிற்கு அனுப்பினார்கள். ஆனால், அது வெற்றிபெறவில்லை. 2 வது முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவை நோக்கி இஸ்ரோ அனுப்பியது.

ஆனால் ரோவர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அதன் மேற்பரப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தே இந்த சந்திரயான் 3 விண்கலம்ஏவப்பட்டது.
வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தெற்கு பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் சந்திரயான் 3 இஸ்ரோ அனுப்பியது. விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. அதன் பின் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது.
இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி இருக்கிறது. விக்ரம் லேண்டர் நிலாவை தொட்ட உடன் சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோவுக்கு ஒரு மெசேஜை அனுப்பியது. "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான்." என அது மெசேஜ் அனுப்பியதாக இஸ்ரோ ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.
இதன் மூலமாக நிலவில் விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. இதில் விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்திய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. இந்த நிலையில் இஸ்ரோவுக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பகுதியில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் அனுப்பி இருக்கிறது.
First photo of Rover coming out of the lander on the ramp. pic.twitter.com/0ouhMk8MbR
— Pawan K Goenka (@GoenkaPk) August 23, 2023
அந்த 4 புகைப்படங்களையும் ட்விட்டரில் இஸ்ரோ பகிர்ந்து உள்ளது. "விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது." என்று ட்விட்டரில் இஸ்ரோ பதிவிட்டு உள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டரின் மீது படிந்து இருந்த நிலவின் மணல் தூசு விலகியதை தொடர்ந்து பிரக்யான் ரோவர் அதில் இருந்து வெளிவர தொடங்கியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications