Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ இது வெறும் ப்ளூ காய்ச்சல் இல்லையா..? கர்நாடகாவிலும் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. இதன் அறிகுறிகள் ஃப்ளூ காய்ச்சலை போல இருந்தாலும் இது ஃப்ளூ காய்ச்சல் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது கர்நாடகாவிலும் கடும் வேகத்தில் புதிய வகை காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த காய்ச்சல் பயங்கர அறிகுறிகளுடன வாரக்கணக்கில் மனிதர்களை முடக்கிப்போடக்கூடியதாக இருப்பதால் கர்நாடகா மக்கள் பீதயடைந்துள்ளனர்.

திடீரென பரவும் காய்ச்சல்

திடீரென பரவும் காய்ச்சல்

இந்தியாவில் திடீரென கடந்த சில தினங்களாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த இந்த காய்ச்சல், பிறகு பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்து இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வீரியமிக்க ஃப்ளூ காய்ச்சல்

வீரியமிக்க ஃப்ளூ காய்ச்சல்

காய்ச்சல் என்றால் சாதாரணமானது போல இல்லாமல் பயங்கர உடல் வலியும், கடுமையான இருமலும் இருந்ததால் இது கொரோனோ வைரஸ் காய்ச்சலாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது இன்ஃப்ளூயன்ஸா A H3N2 எனப்படும் வைரஸால் ஏற்படும் ஃப்ளூ காய்ச்சல் என்பது தெரியவந்தது. மற்ற ஃப்ளூ காய்ச்சல் வைரஸ்களை காட்டிலும் 'இன்ஃப்ளூயன்ஸா A H3N2' வைரஸ் மிகவும் வீரியமானது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பொதுவாக, இந்த வகை வைரஸ் தாக்கினால் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு அதிதீவிர காய்ச்சலும், தொடர் இருமலும் சளியும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், காய்ச்சல் விட்ட பிறகும் அதன் அறிகுறிகளான இருமல், சளி, உடல்வலி ஆகியவை 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிய வகை வைரஸ்?

கர்நாடகாவில் புதிய வகை வைரஸ்?

இந்த சூழலில், கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. இதன் அறிகுறிகள் ஃப்ளூ காய்ச்சலை போல இருந்தாலும் இது ஃப்ளூ காய்ச்சல் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான தலைவலி, நெஞ்சு சளி, வறட்டு இருமல் இதன் அறிகுறிகளாக இருக்கிறது. எனவே, இது புதிய வகை வைரஸ் அல்லது பாக்டீரியா காய்ச்சலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இது எந்த வகையான காய்ச்சல் என கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய வகை காய்ச்சலும் வாரக்கணக்கில் மனிதர்களை முடக்கிப் போட்டுவிடுவதாகவும், மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவும் அதிகரிப்பு

கொரோனாவும் அதிகரிப்பு

இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. நேற்று கர்நாடகாவில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பெங்களூரில் மட்டும் 79 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு பெங்களூர் உட்பட கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இதனால் கர்நாடகா அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் தற்போது கொரோனாவுக்கு 291 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+