பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடிகாலையில்.. அணைக்கட்டுக்கு பர்தா அணிந்த "பெண்".. சுற்றி வளைத்த போலீஸ்.. கடைசியில் பார்த்தால்?

ஆலமட்டி பகுதியில் பர்தா அணிந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது, விசாரணையும் நடக்கிறது

Google Oneindia Tamil News

பெங்களூரு: பர்தா அணிந்த பெண், விடிகாலை நேரம் அணைப்பகுதிக்கு வந்ததையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், பகீர் தகவல் வெளியானது.

சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பர்தா விவகாரம் பள்ளி, கல்லூரிகளில் வெடித்தது.. அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவ அமைப்புகள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் பெரும் சர்ச்சை உருவானது..

செங்கல்பட்டு தொடங்கி ராமநாதபுரம் வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை..5 நாட்களுக்கு நீடிக்குமாம்! செங்கல்பட்டு தொடங்கி ராமநாதபுரம் வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை..5 நாட்களுக்கு நீடிக்குமாம்!

 பர்தா விவகாரம்

பர்தா விவகாரம்

ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களில் இன்னொரு பிரிவினர், கல்லூரிகளுக்கு நீலத் துண்டை அணிந்து வந்தனர்... அவர்கள் ஹிஜாப் அணிவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பிறகு, உடுப்பி, விஜயபுரா மாவட்டத்திற்குள்ளும், ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்... இதையடுத்து, இந்த ஹிஜாப் விவகாரம், தேசிய அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தையும், கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றதையும் நாடறியும்.

 அணையில் பெண்

அணையில் பெண்


இந்நிலையில், இதே விஜயபுரா மாவட்டத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. ஆலமட்டி அருகில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி அணை பகுதியில், விடிகாலை நேரத்தில், பர்தா அணிந்த பெண் ஒருவர், நுழைய முயற்சித்துள்ளார்.. அங்கே அணை நுழைவாயிலில் செக்யூரிக்காக நின்றிருந்த போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.. "இந்த அதிகாலை நேரத்தில் அணையை பார்க்க அனுமதி கிடையாது" என்று அவரை வழிமறித்து தடுத்துள்ளனர்.

 ஆண் குரல்

ஆண் குரல்

அதற்கு அந்த பெண் முதலில் சைகையில் பதில் சொல்லி உள்ளார்.. பிறகு, போலீசார் விசாரித்தபோதுதான், பேச ஆரம்பித்துள்ளார்.. அப்போதுதான், பர்தா அணிந்திருப்பது பெண் இல்லை, ஒரு ஆண் என்பது அவரது குரலில் தெரியவந்தது.. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த நபரை கண்காணித்தனர்... கொஞ்ச நேரத்துக்கு பிறகு, பர்தா இல்லாமல், கையில் ஒரு பையுடன் அணை நுழைவாயிலுக்கு வந்தார்... உடனே சந்தேகமடைந்த போலீசார், அந்த பையை சோதனையிட்டனர்.

 லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

அதில், இளம் பெண்கள் அணியும் டிரஸ்கள், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போன்றவை இருந்தன.. உடனே, அந்த இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்... விசாரணையில் அவரது பெயர் கிஷோர், வயது 22 என்பதும் தெரியவந்தது.. ஹாசனை சேர்ந்தவர் இந்த இளைஞர்.. இதே ஹாசன் பகுதியிலேயே ஒரு பேக்கரி வைத்திருக்கிறாராம்.. இவர் சமீபகாலமாகவே உடல் ரீதியில் பெண்ணாக உணர்வதால், இளம்பெண் போன்று உடை அணிய ஆரம்பித்துள்ளார்.

 விடிகாலை நேரம்

விடிகாலை நேரம்

இப்படிப்பட்ட சூழலில், இவருக்கு திருமணம் செய்ய, பெற்றோர் பெண் தேடுகின்றனர்... இவர் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் வீட்டில் கேட்கவில்லையாம்.. அதனால், வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டாராம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளன.. இருந்தாலும், ஹாசனிலிருந்து, ஆலமட்டிக்கு வந்தது ஏன்? அதுவும் அதிகாலையே அணையில் இவருக்கு என்ன வேலை? அணை பகுதிக்குள் நுழைய முயற்சித்தது ஏன்? என்று போலீசார் கிஷோடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
secret behind burqa man and what happened in almatti lal bahadur shastri dam ஆலமட்டி பகுதியில் பர்தா அணிந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது, விசாரணையும் நடக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X