Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்.. மங்களூரில் பேன்சி கடைக்காரர் படுகொலை.. 3 நாள் 144 தடை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே கடைக்காரரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் டிசம்பர் 27 வரை 3 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொலையாளிகளை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று தட்சிண கன்னடா. கடலோர மாவட்டமாக இது அமைந்துள்ளது. இந்த மாவட்டம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. குறிப்பாக மதம்சார்ந்த பிரச்சனைகள் தட்சின கன்னடா மாவட்டத்தில் அவ்வப்போது எழுந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மங்களூர் புறநகரில் பேன்சி கடைக்காரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் யார்? நடந்தது என்ன? என்பது பற்றிய முக்கிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

கத்திக்குத்து

கத்திக்குத்து

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் புறநகர் பகுதியான காடிபள்ளா 4வது பிளாக்கில் வசித்து வந்தவர் ஜலீல் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே கிருஷ்ணாபுரத்தில் பகுதியில் மளிகை பொருட்களோடு கூடிய பேன்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு வேகமாக ஓடிவிட்டனர். இதனால் ஜலீல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

மருத்துவமனையில் இறப்பு

மருத்துவமனையில் இறப்பு

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இறந்து போன கலீலுக்கு மனைவி, மகன் உள்ளனர். ஜலீலை எதற்காக மர்மநபர்கள் கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. இதனால் பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

 சகோதரர் கூறுவது என்ன?

சகோதரர் கூறுவது என்ன?

இதற்கிடையே ஜலில் பற்றி அவரது சகோதரர் முகமது கூறுகையில், ‛‛எனது சகோதரர் யாரிடமும் பிரச்சனைக்கு செல்வது இல்லை. காலையில் கடைக்கு சென்றால் இரவு வைர வியாபாரம் மட்டும் தான் செய்வார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரிடமும் நன்றாக பழகினான். யாரிடமும் குரலை கூட உயர்த்தி பேசமாட்டான். அவன் எந்த அமைப்பு மற்றும் அரசியல் கட்சியுடனும் சேர்ந்து செயல்படவில்லை. போலீஸ் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

ஜலீலின் இந்த கொலை தற்போது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதுபற்றி மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறுகையில், ‛‛2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொலை செய்துள்ளனர். இறந்தவர் பெயர் ஜலீல். சூரத்கல் பதற்றமான பகுதியாக உள்ளது. இதனால் சூரத்கல், பஜ்பே, காவூர், பனம்பூர் ஆகிய 4 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று காலை 6 மணி முதல் டிசம்பர் 27 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். கொலை செய்தவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். '' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+