ராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்

பெங்களூரு டாக்டர் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால், புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்தாராம் ஒரு லேப் டெக்னீஷியன்.. அந்த கொடுமை போதாது என்று இன்னொரு கொடுமை இப்போது நடந்துள்ளது.. கொரோனா முகாமில் இருந்த ஒரு பெண்ணின் உடம்பில், கண்ட கண்ட இடங்களில் தொட்டு பாலியல் சீண்டல் தந்துள்ளார் ஒரு டாக்டர்.. நைட் நேரத்தில் ரவுண்ட்ஸ் வந்தவர், இந்த கன்றாவி வேலையில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொற்றின் தீவிரம் அதிகமாகி வருகிறது.. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதன்காரணமாக, விக்டோரியா ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை 25ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ராத்திரி 10 மணிக்கு மேல் டாக்டர் ஒருவர் ரவுண்ட்ஸ் வந்துள்ளார்.. அப்போது அங்கு படுத்திருந்த ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.. அந்த பெண்ணின் உடம்பில் கண்ட கண்ட இடங்களில் கையை வைத்து முறையற்ற வகையில் தொட்டுள்ளதாக தெரிகிறது.

 டாக்டர்

டாக்டர்

நடந்ததை பற்றி அந்த பெண் அங்கிருந்த பெண் டாக்டரும் அதிகாரியுமான அசிமா பானுவிடம் சொல்லி கதறி அழுதார்.. இதை கேட்டு அதிர்ந்த டாக்டர் அசிமா, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இதை தெரித்துள்ளார்.. பிறகு ஆஸ்பத்திரி தரப்பில் போலீசில் புகார் தரப்பட்டது.. அந்த புகாரின்பேரில் விசாரணையும் நடந்து வருகிறது.

 ஆஸ்பத்திரி நிர்வாகம்

ஆஸ்பத்திரி நிர்வாகம்

இருந்தாலும், நடந்த சம்பவம் பற்றியோ, குற்றம்சாட்டப்பட்டவர் பற்றியோ போதுமான தகவல்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் தர முன்வரவில்லையாம்.. விசாரணை முடிந்தால்தான் இதை பற்றி முழுமையாக தெரியவரும் என்று காவல்துறை சார்பில் சொல்லப்படுகிறது.

 பெண் பலாத்காரம்

பெண் பலாத்காரம்

ஆனால் நாளுக்கு நாள் கொரோனா மையங்களில் பாலியல் தொல்லைகள் அதிகமாகி வருகின்றன.. தொற்று பாதித்த 40 வயசு பெண்பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. தொற்று இருக்கிறதா என்று செக் செய்கிறேன் என சொல்லி, 14 வயது சிறுவனின் டிரஸ்ஸை கழட்டி, பாலியல் சீண்டல் நடந்துள்ளது.. டெல்லி சத்தார்பூரில் 14 வயசு பெண் கொரோனா மைய பாத்ரூமிலேயே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

காமுகர்கள்

காமுகர்கள்

இதற்கெல்லாம் என்ன காரணம்? சில தனிமைப்படுத்தப்படும் முகாம்கள் வீடுகள் போல இருக்கிறது என்று பரவலாக சொல்லப்படுகிறது. நோயாளிகள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு தனி தனி ரூம்கள் போல ஒதுக்கப்பட்டுள்ளது. இதைதான் இந்த காமுகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

Recommended Video

    பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த டாக்டர் விவகாரம் என்ன ஆனது ? | Oneindia Tamil
     முகாம்

    முகாம்

    கொரோனா சிகிச்சை மையங்களிலும் சரி, முகாம்களிலும் சரி, தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது.. சிசிடிவி போன்றவைகளை பொருத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.. மேலும் கொரோனா டெஸ்ட்கள் குறித்த விழிப்புணர்வும் சொல்லப்பட வேண்டி உள்ளது!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+