லிமிட் இல்லை.. ஸ்டாலின் ஸ்டைலில் இறங்கிய சித்தராமையா.. கர்நாடகாவிற்காக இறக்கப்பட்ட பிரம்மாஸ்திரம்
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வெளியிட்டு இருக்கும் வாக்குறுதி ஒன்று பெரிய கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்தால், தேசிய அளவிலான 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற லிமிட்டை தாண்ட வேண்டி இருக்கும். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தால், தேசிய அளவிலான 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற லிமிட்டை தாண்ட வேண்டி இருக்கும் என்ற வாதம் வைக்கப்பட்டு வந்தது. 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு வந்தது.
இதுவரை தேசிய அளவில் நிலவி வந்த 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாட்டிற்கு எதிராக அவர் தீர்ப்பு வழங்கினர். தேசிய அளவில் மாநில அரசு மத்திய அரசு சேர்த்து மொத்தம் 50 சதவிகிதம் மட்டுமே அதிகபட்சமாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கு மேல் இடஒதுக்கீடு வழங்க கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே இதற்கு விதி விலக்கு உள்ளது.
சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறுவது தவறில்லை.
இந்த கட்டுப்பாடு என்பது கட்டாயமான கட்டுப்பாடு கிடையாது. அவசியமாக இதை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
50 சதவிகிதம் இடஒதுக்கீடு கட்டுப்பாடு என்பது கட்டாயம் அல்ல. அரசியலமைப்பு ரீதியாக இதை மீறவே கூடாது என்ற விதி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது.
அப்போதே இதை பல்வேறு மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இடஒதுக்கீட்டை கூடுதலாக வழங்க, 50 சதவிகிதத்திற்கும் மேல் வழங்க மாநில அரசுகள் இதை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டு இருப்பது போல மற்ற மாநிலங்கள் கூடுதல் இடஒதுக்கீடுகளை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கருதப்பட்டது.
தற்போது அதே போன்ற வாக்குறுதியை கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வெளியிட்டு இருக்கும் வாக்குறுதி ஒன்று பெரிய கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதாமாக உயர்த்தும். எல்லா தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். எல்லா பிரிவினருக்கும் ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
சமீபத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கர்நாடகாவில் எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில்தான் இந்த இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் இருப்பது போலவே தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அங்கே பாஜக அரசு சார்பாக இஸ்லாமியர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு நீக்கப்பட்டு அது வோக்கலிகா, லிங்காயத் ஆகியோருக்கு சமமாக பிரித்து வழங்கப்பட்டது. அதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications