கடனை விட சொத்துகள் அதிகம்.. உரியவர்களுக்கு திருப்பி கொடுங்கள்.. கடிதத்தில் சித்தார்த்தா உருக்கம்
Recommended Video
பெங்களூர்: கடன் கொடுத்தவர்களுக்கு சொத்துகளை திருப்பி கொடுத்துவிடுங்கள் என தனது இறுதி கடிதத்தில் சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளார்.
காபி டே நிறுவனர் சித்தார்த்தா, நேற்று இரவு மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் நடக்க சென்றவர் திரும்பி வரவேயில்லை. கார் டிரைவர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்ஷின கன்னட போலீஸார், சித்தார்த்தாவை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்தார்த்தா காணாமல் போனதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தனது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வர்த்தகம்
அந்த கடிதத்தில் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் எனது தொழிலை லாபகரமானதாக்க முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 6 மாதத்திற்கு முன்பு நான் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தேன். இதற்காக எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெரும் பணத்தை கடனாக பெற்றேன்.

போராட்டம்
ஆனால் நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் நான் போராடி விட்டேன்.. இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. எனவே எனது போராட்டத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து விட்டேன்.

சொத்துகள் பட்டியல்
எனக்கு யாரையும் ஏமாற்றும் எண்ணம் இல்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன். இதை நீங்கள் என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். இந்த கடிதத்துடன் எனக்கு சொந்தமான சொத்துகளின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.

திருப்பி செலுத்துங்கள்
மேலும் அந்த சொத்துகளின் தோராய மதிப்பையும் குறிப்பிட்டுள்ளேன். கடன் தொகையை விட அதிக எண்ணிக்கையில் சொத்துகள் உள்ளன. எனவே யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு திருப்பி செலுத்திவிடுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications