இருட்டில் படர்ந்த 'கை..' நண்பர்களுக்கு மனைவியையே ட்ரீட் வைத்த சைக்கோ சாப்ட்வேர் ஊழியர் சிக்கினார்
பெங்களூர்: கர்நாடகாவில் தனது மனைவியை அலுவல நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியதாக சாஃப்ட்வேர் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் சம்பிகேஹள்ளி பகுதியில் சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது.
இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. மனைவி, குழந்தை என குடும்பம் அழகாக சென்றுகொண்டிருக்கையில் திடீரென வந்தது ஒரு பூகம்பம்.

குடும்பம்
அதாவது திருமணத்திற்கு முன்பு சாஃப்ட்வேர் என்ஜினியருக்கு குடிப்பழக்கம் இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமணமான கொஞ்ச நாட்கள் கணவனும் தனக்கு குடி பழக்கம் இருப்பதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து இது வெளியில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், பெரிய பிரச்னையாக வெடிக்கவில்லை. இப்படியே போய்கொண்டிருக்க இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

போதை
இதனையடுத்து கணவனின் சுயரூபம் வெளியில் வந்துள்ளது. அதாவது, வேலையில் டென்ஷன் என மீண்டும் கணவர் குடியை தொடங்கியுள்ளார். சரி இது இயல்புதானே என்றும் மனைவி லைட்டாக கண்டித்து விட்டுவிட்டார். வாரத்தில் ஒரு நாள் என்று இருந்த குடி நாளடைவில் வாரத்திற்கு 4 முறை என்று மாறிப்போனது. மட்டுமல்லாது புகைப்பழக்கமும் தொற்றிக்கொண்டுள்ளது. இது குறித்து எவ்வளவோ சொல்லியும் கணவர் கேட்கவில்லையென அப்பெண் அக்கம் பக்கத்து வீடுகளில் புலம்பி இருக்கிறார். பின்னர் குடித்துவிட்டு வந்து செக்ஸ் வைத்துக்கொள்வது என புதுப்பழக்கம் தொடங்கியுள்ளது ஆகியுள்ளது.

பார்ட்டி
அப்போது இந்த சம்பவங்களை சாஃப்ட்வேர் என்ஜினியர் கணவர் தனது ரகசிய கேமிராவில் படம் எடுத்துள்ளார். பின்னர் ஒருநாள் தனது அலுவலக நண்பர்களை பார்ட்டி என வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மனைவியும் சரி பார்டிதானே என்று சாதாரணமாக நினைத்துக்கொண்டார். ஆனால், அதில் தான்தான் இரை என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. முதலில் மாதத்திற்கு ஒரு முறை என தொடங்கிய பார்ட்டி நாளடைவில் மாதத்திற்கு 3-4 என நீடித்துள்ளது. மட்டுமல்லாது பார்ட்டியில் விதவிதமான போதை பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இப்படியே போய்க்கொண்டிருக்கையில் திடீரென ஒருநாள் கணவரின் நண்பன் இப்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இப்பெண் கத்தி கூப்பாடு போடவே சாஃப்ட்வேர் என்ஜினியர் ஓடி வந்து விசாரிக்க, மனைவி நடந்ததை கூறியுள்ளார்.

ப்ளாக்மெயில்
ஆனால் இந்த பிரச்னையை சாஃப்ட்வேர் என்ஜினியர் கணவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது மனைவிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஒருநாள் இது தொடர்பாக சாஃப்ட்வேர் என்ஜினியர் கணவன் மனைவியிடம் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது "எனது நண்பர்களுக்கு உன்னை பிடித்திருக்கிறது. எனவே அவர்கள் விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த அப்பெண் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், விவாகரத்துக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதற்கு சாஃப்ட்வேர் என்ஜினியர் கணவன் சம்மதிக்கவில்லை. மட்டுமல்லாது ரகசிய கேமிராக்களில் பதிவு செய்யப்பட்ட படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாகவும், எனவே தான் சொன்னதை கேட்டு நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அப்பெண் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவர் மீது ஏற்கெனவே பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருந்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications