Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹய்யய்யோ.. யாரு "நாகராஜனா"? தோட்டத்தில் அலறிய தாய்.. வாயாலேயே விஷத்தை உறிஞ்சி.. ஆஹா.. சூப்பர்ப் மகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: 20 வயது கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து கொண்டிருக்கிறது.. யார் இந்த ஷ்ராம்மியா ராய்? என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்?

கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ளது புத்தூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் மமதா.. 40 வயதாகிறது.. இவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார்.

இவரது மகள் ஷ்ரம்யா.. 20 வயதாகிறது.. விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.. சம்பவத்தன்று, மமதா விவசாய வேலைக்காக தோட்டத்திற்கு சென்றார்..

 தோட்டம்

தோட்டம்

அப்போது, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மோட்டார் ஆன் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது அங்கே, நாகப்பாம்பு இருப்பது தெரியாமல், அதை மிதித்துவிட, அந்த நாகம், மமதாவின் காலில் கடித்துவிட்டது.. பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம், பாம்பின் விஷம் உடம்பெல்லாம் பரவ துவங்கியது.. உடலின் முக்கிய பாகங்களுக்கு விஷம் பரவுவதை தடுக்கும் வகையில், உடனடியாக பக்கத்தில் இருந்த காய்ந்த புற்களை எல்லாம் ஒன்றாக திரட்டி கொண்டுவந்து, பாம்பு கடித்த இடத்திற்கு மேல் வைத்து, இறுக்கமாக கட்டினார் மம்தா.

 நாகப்பாம்பு

நாகப்பாம்பு

மம்தாவை பாம்பு கடித்துவிட்டதை அந்த வழியாக வந்தவர்கள் கவனித்தனர்.. உடனடியாக ஊருக்குள் சென்று மம்தாவின் வீட்டுக்கு தகவல் தந்தனர்.. அம்மாவை பாம்பு கடித்துவிட்டது என்பதை கேள்விப்பட்டதுமே, மமதாவின் மகள் ஷ்ரம்மியா பதறியடித்து கொண்டு தோட்டத்துக்கு ஓடிவந்தார்.. உடலில் விஷம் பரவாமல் இருப்பதை தடுக்க, காலில் போடப்பட்டுள்ள புல்கட்டை கவனித்தார் ஷ்ரம்மியா.. ஆனால், விஷம் பரவாமல் இருக்க, இந்த புல்கட்டு மட்டுமே போதாது என்பதை ஷ்ராமியா உணர்ந்தார்... அதனால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நினைத்தார்.

 உறிஞ்சி எடுத்தார்

உறிஞ்சி எடுத்தார்

ஒருவேளை மருத்துவமனைக்கு செல்வதற்குள் பாம்பு விஷம் பரவிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்த ஷ்ரம்மியா, கடிபட்ட அம்மாவின் காலில், தன்னுடைய வாயை வைத்து விஷத்தை உறிஞ்ச தொடங்கிவிட்டார்.. மெல்ல மெல்ல விஷத்தை உறிஞ்சி எடுத்து கீழே துப்பினார் ஷ்ராம்மியா.. எதை பற்றியும் யோசிக்காமல், வேறு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், டக்கென காலில் உள்ள விஷத்தை, 20 வயது பெண் துணிச்சலாக உறிஞ்சி எடுத்ததை பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு திகைத்து நின்றனர்.. அதற்கு பிறகு மருத்துவமனைக்கு தன் அம்மாவை கொண்டு சென்றார் ஷ்ராம்மியா..

 ஸ்கவுட்

ஸ்கவுட்

தக்க சமயத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மமதாவின் உயிர் காப்பாற்றப்பட்டது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஷ்ரம்மியா மிகவும் தைரியமான பெண் என்கிறார்கள்.. தான் படிக்கும் கல்லூரியில் ஸ்கவுட் இயக்கத்தில் சேவை புரிந்து வருகிறார்.. ஏதோ ஒரு சினிமாவில், பாம்பு கடித்தவர்களின் உடலில் இருந்து விஷத்தை உறிஞ்சி துப்பும் காட்சி நினைவுக்கு வந்ததாம்.. அதனால்தான், அதேபோன்ற காரியத்தை மேற்கொண்டதாக கூறுகிறார்.. தற்போது ஷ்ரம்மியாவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கிறது..

 சோப் தண்ணீர்

சோப் தண்ணீர்


பொதுவாக, பாம்பு கடித்துவிட்டால், முதலில் சோப் மற்றும் தண்ணீர் வைத்து நன்றாக கழுவ வேண்டும் என்கிறார்கள்..
கடித்த இடத்தில் வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால், பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள், சாணம் இப்படியெல்லாம் தடவிவிடக்கூடாது என்று சொல்கிறார்கள்.. எப்போதுமே பாம்பு கடித்துவிட்டால், அது எந்த நேரத்தில் கடித்தது என்பதையும், அது என்ன பாம்பு வகை என்பதையும் அடையாளம் தெரிந்திருப்பது நல்லதாம். அதைவிட முக்கியமாக, பாம்பு கடித்துவிட்டால், தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது நல்லது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+