அடப்பாவி.. தலைக்கேறிய மப்பு.. குறுக்கே வந்து ஸ்னேக் பாபு.. கடுப்பாகி பிடித்து.. ஏன் குமாரு இந்த வெறி
பாம்பை ஒருவர் கடித்து துப்பிய வீடியோ வைரலாகி வருகிறது
பெங்களூரு: பாம்பு கடித்து மனிதர்கள் இறப்பது அந்த காலம்.. இப்போ அப்படி இல்லை.. மனிதர்களை கண்டு பாம்பு நடுங்கி ஓடி ஒளிகிறது.. ரோட்டில் பாம்பு ஒன்று குறுக்கே வந்துவிட்டது.. அதனால் போதை தலைக்கேறிய குமார், உயிருடன் இருந்த அந்த பாம்பை கையில் பிடித்து கொண்டே துண்டு துண்டாக கடித்து துப்பி உள்ளார்.. கடிக்கும்போது, "இனிமேல் என் வழியில் குறுக்கே வருவியா" என்று பாம்பிடம் பேசிக் கொண்டே அதை கொன்றுள்ளார். அந்த பகுதி மக்கள் இந்த சம்பவத்தை நடுங்கியபடியே வீடியோ எடுத்துள்ளனர்!!
Recommended Video
இவ்வளவு நாள் நிம்மதியாக இருந்த நிலையில், பல மாநிலங்களில் மதுக்கடைகள் அடுக்கடுக்காக திறந்து விடப்பட்டுள்ளன.. இதனால் குடிமகன்கள் அட்டகாசம் 2 நாளாக பெருகி கொண்டு வருகிறது.
மதுவிற்பனையில் கர்நாடகம்தான் லீடிங்கில் உள்ளதாக சொல்லப்படுகிறது. சும்மாவே குடிமகன்களின் அலப்பறைகள் தாங்காத நிலையில், கொரோனா காலத்தில் மேலும் ரகளை அதிகமாகி கொண்டே வருகிறது.

பைக்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் என்ற இளைஞர். இவர் மதுக்கடை திறந்த குஷியில் ஓவராக குடித்துவிட்டார்.. பிறகு அங்கிருந்து பைக் எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்... அப்போது ரோட்டில் ஒரு பாம்பு குறுக்கே சென்றது.. ஆனால் அந்த பாம்பு மீது பைக் சக்கரம் ஏறிவிட்டதால், அடி பலமாக பட்டது.

நடுரோடு
அடிபட்டு உயிருக்கு துடித்த அந்த பாம்பை பார்த்ததும் குமார் வண்டியை நிறுத்திவிட்டார்.. பாம்பை கையில் எடுத்து நடுரோட்டில் பைக்கில் உட்கார்ந்துகொண்டு கடித்து குதற ஆரம்பித்தார். பிறகு கடித்து கொண்டே அந்த பாம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.. "நான் வரும்போது வழியில நீ எப்படி வரலாம்? இனிமேல் என் வழியில குறுக்கே வருவியா" என்று கேட்டுக் கொண்டே பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பினார்.

கொன்னுட்டேனே
"நீ என்னை கடிக்கலாம்னுதானே வந்தே, ஆனால் அதுக்கு முன்னாடியே நான் உன்னை கொன்னுட்டேனே" என்று உளறி உள்ளார்.. பாம்பை உயிருடன் பிடித்து கடித்து துப்பியதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியாகி நின்றனர்.. சிலர் இதை செல்போனில் வீடியோவாக படம் பிடித்தனர்.. போதையின் உச்சத்துக்கு சென்ற இளைஞரின் இந்த வீடியோ பார்த்த பலரும் விக்கித்து உறைந்துள்ளனர்.

வைரல் வீடியோ
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.. இப்படித்தான் குஜராத்திலும் 70 வயது முதியவர் தன்னை கடித்த பாம்பை கடித்து துப்பினார்.. இப்போது கர்நாடகாவில் கடித்து துப்பி உள்ளார்.. நாளைக்கு நம்ம ஊரிலும் குடிமகன்கள் இப்படி இறங்கி விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.. இன்னும் ஊரடங்கு முடிவதற்குள் நாம் என்னென்னவெற்றை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளதோ!!
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications