Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் இவ்ளோ லேட்? 2 மணி நேரம் தாமதமாக வந்த "பொம்மை".. காத்திருக்காமல் கிளம்பிய வீரர்.. பரபர சம்பவம்

பியார்ன் போர்டி அவர் கோபமாக எழுந்து சென்றதாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விழா ஒன்றிற்கு தாமதமாக வந்தது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த விழாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.

தேர்தலை முன்னிட்டு பாஜகவும் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரங்களை செய்து வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்களை சந்தித்தார்.

பாராட்டு விழா

பாராட்டு விழா

இந்த தேர்தலுக்காக பசவராஜ் பொம்மை தீவிரமாக பணிகளை செய்து வருகிறார். அதற்கு இடையில் பெங்களூரில் அவர் பிரதமர் டென்னிஸ் வீரர் பியார்ன் போர்டிக்கு பாராட்டு விழா நடத்துவதாக இருந்தது. பியார்ன் போர்டி டென்னிஸ் உலகில் லெஜண்ட் என்று அழைக்கப்படும் வீரர் ஆவார். சுவீடன் நாட்டை சேர்ந்த இவர் முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரர். 1974-81 வரை ஆறு பிரெஞ்சு ஓப்பன் கோப்பைகளை வென்று இவர் சாதனை படைத்து இருக்கிறார். ஐந்து விம்பிள்டன் கோப்பைகளையும் பெற்றுள்ளார். 15 கிராண்ட் பிரிக்சு தொடர் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

சிறப்பு

சிறப்பு

டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக இவர் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில்தான் அவருக்கு பெங்களூரில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் பசவராஜ் பொம்மை சார்பாக அரசு இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து இருந்தது. 9-10 இந்த விழா இன்று காலை நடப்பதாக இருந்தது. ஆனால் விழாவிற்கு பியார்ன் போர்டி வந்தும் முதல்வர் பொம்மை மட்டும் வரவில்லை. பியார்ன் போர்டி 11 மணி வரை காத்து இருந்து பார்த்தார். விழாவில் முதல்வர் வருகைக்காக யாரும் பேசாமல் இருந்தனர். இப்போது பேசினால் முதல்வரை அவமதிக்கும் வகையில் அது ஆகிவிடும் என்பதால் பேசாமல் இருந்தனர்.

பியார்ன் போர்டி

பியார்ன் போர்டி

இதனால் பியார்ன் போர்டியும் பொறுத்து பொறுத்து பார்த்தார். ஆனால் 11 மணி ஆகியும் முதல்வர் பசவராஜ் பொம்மை வரவில்லை என்பதால் பியார்ன் போர்டி பாதியில் கிளம்பினார். தனக்கு வழங்கப்படும் பாராட்டு விழா தொடங்கும் முன்பே அவர் விழாவில் இருந்து கிளம்பினார். தனது மகன் லியோவின் டென்னிஸ் போட்டி நடப்பதால் அதை பார்க்க பியார்ன் போர்டி கிளம்பி சென்றார். முதல்வர் பொம்மை நீண்ட நேரம் எடுத்த காரணத்தால் கடுப்பாகி பியார்ன் போர்டி கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு இவ்வளவு தாமதமாக வருவார்கள் என்று பியார்ன் போர்டிக்கு தெரியாது.

கோபம்

கோபம்

இதனால் அவர் கோபமாக எழுந்து சென்றதாக கூறப்படுகிறது. இதன்பின் பொம்மை சரியாக 11.30 மணிக்கு வந்து பார்த்தார். ஆனால் விழா அரங்கில் பியார்ன் போர்டி இல்லை. அதனால் முதல்வரும் திரும்பி சென்றார். இதனால் கடைசியில் அந்த பாராட்டு விழாவே ரத்து செய்யப்பட்டது. பியார்ன் போர்டி கிளம்பி சென்றது தெரிந்து கோபத்தில் பாராட்டு விழாவை ரத்து செய்யும்படி பொம்மை கூறியதாக தெரிகிறது. இந்த விழாவில் வேறு சில உள்ளூர் வீரர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+