திருமணம் மீறிய உறவு! குழந்தை வளர்ப்பில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. தந்தைக்குத்தான் முழு உரிமை!
குழந்தையை மனைவி கவனித்துக்கொள்ளாமல் அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கணவனை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த இளம்பெண் தன்னுடைய குழந்தையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்பதால் அக்குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை நீதிமன்றம் தந்தைக்கு வழங்கியுள்ளது. இதனையடுத்து குழந்தை தாயிடமிருந்து பிரித்து தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்த நிலையில், குழந்தை இல்லாத காரணத்தால் விவாகரத்து செய்துவிட்டார். இதனையடுத்து வேறு ஒரு பெண்ணை மேட்ரிமோனி மூலமாக அணுகினார். மருத்துவரான இப்பெண்ணுக்கும் ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்தது. எனவே இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
2015ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. அவருக்கு இந்த உறவு முறையில் விருப்பம் இல்லையென்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை ஏன் எதற்கு என தொந்தரவு செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அப்பெண் தனது பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு 2018ம் ஆண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வழக்கு
பின்னர் பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் மாப்பிள்ளை ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "நானும் எனது மனைவியும் 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் மருத்துவர்கள். எங்களுக்கு 2015ல் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மனைவிக்கு குடும்ப வாழ்க்கையில் பெரிய அளவுக்கு விரும்பம் இல்லாமல் போய்விட்டது. மட்டுமல்லாது அவர் என்னை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இந்த வாழ்க்கையில் எங்களுடைய மகளின் எதிர்காலம் பாழாகிவிட்டது. மகள் தற்போது மனைவியின் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு தாயின் அன்பு கிடைக்கவில்லை.

விசாரணை
எனவே மகளை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அப்படி செய்தால் குறைந்தபட்சம் தந்தையின் பாசமாவது அவளுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் அவளுடைய எதிர்காலங்களையும் நான் வளமாக திட்டமிடுவேன்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடுத்தவரின் மனைவி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்திலேயே வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார். மட்டுமல்லாது பொதுவெளியில் இதற்கு முன்னர் இப்படி அநாகரீகமாகவும் நடந்துக்கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன. இதற்கெல்லாமல் உச்சமாக தனது குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேல்முறையீடு
மேலும், குழந்தையின் எதிர்காலத்திற்கு என எந்த திட்டமிடலும் இன்றி இருந்திருக்கிறார். இந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய, நீதிபதி குழந்தை இனி தந்தையிடத்திலேயே வளரலாம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டுள்ளனர். இதனை ஏற்காத குழந்தையின் தாய் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இது குறித்த வழக்கு விசாரணை முடிவுற்று நேற்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில் குடும்ப நல நீதிமன்றம் தனது விசாரணையை சரியாக செய்து அதன் வரம்புக்குள் முறையான தீர்ப்பைதான் வழங்கி இருப்பதாக கூறி தாயின் மனுவை தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு
மட்டுமல்லாது வாரத்தில் ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 10 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை குழந்தையை சந்திக்கலாம் என்றும், இது முக்கியமான பண்டிகை நாட்களுக்கும் பொருந்தும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. கோடை கால விடுமுறையில் 10 நாட்கள் வரை குழந்தையுடன் இருக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications