ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பறையில் தனியாக அமர வைத்தது நவீன தீண்டாமை.. ஹைகோர்ட்டில் அனல் பறந்த வாதம்
பெங்களூர்: ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பறையில் தனியாக அமர வைத்தது நவீன தீண்டாமை என வழக்கறிஞர் கூறியதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் அனல் பறந்தது.
மேலும், ஹிஜாப் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அமைதி காக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர இந்துத்துவா அமைப்புகள் தரப்பிடமிருந்து திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே சில கல்லூரிகள் ஹிஜாப்புக்கு தடை விதித்தன.
மேலும், ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில் பதற்றத்தைத் தணிக்க மாநிலம் முழுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடுப்பி அரசு பல்கலைக்கழக பெண்கள் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என்று உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்த மாணவிகள் சார்பாக வழக்கறிஞர் தேவதாத் காமத், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கின் ஆரம்ப கட்டத்தில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதங்களால் அனல் பறந்தது.

அனல்பறந்த வாதம்
"கல்லூரி வளாகத்தில் இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஹிஜாப் அணிவது உட்பட அத்தியாவசியமான மத நடைமுறைகளை கடைப்பிடிக்க அவர்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என காமத் வாதாடினார். அப்போது இந்த விவகாரம் சிலரால் எரிந்து கொண்டிருப்பதாகவும், இந்த நீதிமன்றம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்கிறது என்றும் நீதிபதி வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களுக்கு நல்லதல்ல
போராட்டங்கள், கோஷங்களை எழுப்புதல் மற்றும் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது நல்லதல்ல என்று தெரிவித்தார் நீதிபதி. அப்போது அரு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி, மாநிலத்தில் பொதுப் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவதத் காமத்தும், நவத்கியின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

மத நிறவெறி என வாதம்
தேர்வுகள் நெருங்கி வருவதால் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளில் கலந்துகொள்ள இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற காமத், அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து கொள்ள உரிமை உண்டு என்றும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் துணிகளை அணிவதைத் தடைசெய்து பிப்ரவரி 5ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று காமத் கூறினார். ஹிஜாப் அணிந்த சில மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய காமத், இதனை "மத நிறவெறி" என்றும், நவீன தீண்டாமை எனக் கூறினார்.

அரசு தரப்பு கடும் எதிர்ப்பு
வழக்கறிஞர் காமத் தெரிவித்த கருத்துக்கு, அட்வகேட் ஜெனரல் நவத்கி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுபோன்ற பேச்சுகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். அப்போது நீதிபதி தீட்சித், சட்டத்தின்படி பேசலாம், உணர்வு அல்லது உணர்ச்சிகளால் பேசக்கூடாது எனவும், அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம், அரசியலமைப்பு எனக்கு பகவத் கீதை போன்றதாகும். உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிப்போம். தினமும் மாணவர்கள் சாலைகளில் போராடுவதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சர்வதேச சமூகமும் நம்மை பார்க்கிறது. நான் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தபோது இதுதொடர்பாக நூற்றுக்கணக்கான செய்திகள் வந்தன இது மிகவும் கவலைக்குரியது என்றார் நீதிபதி.

அரசால் தான் பிரச்சினை
அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை தொடர்கையில், சீருடை விதியை தாண்டி மாநில அரசு தாராள மனப்பான்மை காட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது, ஹிஜாப் விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை. சீருடை குறித்து முடிவு செய்ய கல்லூரிகளுக்கு அதிகாரம் இருந்த போதும், காவி துண்டு மற்றும் ஹிஜாப் அணிவது குறித்து மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து அவர்கள் தான் பேச வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் காமத் இது போன்ற அரசின் நிலைப்பாடு தீங்கானது, அரசு, சீருடை தொடர்பாக தற்போது திடீரென ஒரு அரசாணை வெளியிட்டதால்தான் இந்த பிரச்சனை தீவிரமடைந்து உள்ளது என்றார்.
Recommended Video

விசாரணை ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து மேலும் வாதிட்ட காமத், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் இன்றியமையாத நடைமுறையாகும் என்பதை குறிப்பிட்டார். பள்ளிகளுக்கு காவி உடையுடன் தான் செல்ல வேண்டும் என எந்த மத நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதை குறிப்பிட்டார். புனித குர்ஆன் கூறியபடி தலையில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத நடைமுறையில் ஒரு பகுதியாகும். குர்ஆன் கட்டளைகளுக்கு எதிராக மாணவிகளை அரசு வழி நடத்த முடியாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைக்கு ( புதன்கிழமை) ஒத்திவைத்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications