Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவர் பதவியை பறிக்காதீங்க-11 எம்எல்ஏக்கள், 2எம்பிக்களுடன் பெங்களூரில் கார்கேவிடம் கேஎஸ் அழகிரி அடம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கக் கூடாது என அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பெங்களூரில் தமது ஆதரவாளர்களுடன் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் கே.எஸ்.அழகிரி. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து நீடித்து வருகிறார் கேஎஸ் அழகிரி.

TNCC President Row: KS Alagri meets Mallikarjun Kharge with supporters

யார் புதிய தலைவர்?: இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக ஜோதிமணி எம்பி, கார்த்தி சிதம்பரம் எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் செல்வபெருந்தகை என பலரது பெயர்கள் அடிபட்டன. மேலும் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டால் தமிழ்நாடு சட்டசபை குழு தலைவராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்படலாம் எனவும் ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.

TNCC President Row: KS Alagri meets Mallikarjun Kharge with supporters

பெங்களூர் முற்றுகை: இந்நிலையில் கே.எஸ்.அழகிரி, தமது ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் மற்றும் 30 மாவட்ட தலைவர்களுடன் இன்று பெங்களூர் சென்றார். அங்கு காங்கிரஸ் காரிய கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரவாளர்களுடன் கே.எஸ்.அழகிரி இன்று மாலை சந்தித்தார்.

பெங்களூருவில் சந்திப்பு: மல்லிகார்ஜூன கார்கேவுடனான சந்திப்பின் போது, தாமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியதாக பெங்களூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது பதவி காலத்தில் காங்கிரஸில் கோஷ்டிபூசலை வெகுவாக குறைத்துவிட்டதாகவும் ஆளும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான போக்கை பிரச்சனையில்லாமல் கையாண்டு வருவதாகவும் கே.எஸ். அழகிரி, கார்கேவிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமது பதவியை பறித்தால் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைவார்கள்; இதனால்தான் தம்முடன் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பெங்களூர் வந்துள்ளனர் எனவும் கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அழகிரிக்கு எதிர்ப்பு: அதேநேரத்தில் 5 ஆண்டுகள் தலைவராக நீடித்துவிட்ட பிறகு, கட்சி மேலிடம் புதிய தலைவரை நியமிப்பது ஒன்றும் பிரச்சனைக்குரியது அல்ல. கே.எஸ்.அழகிரிதான் தமக்கும் செல்வாக்கு இருக்கிறது என பிரச்சனையை உருவாக்குவதற்காகவே பெங்களூர் சென்றுள்ளார் என்கின்றனர் அவருக்கு எதிரான கோஷ்டிகளின் தலைவர்கள். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரங்களில் அடுத்தது என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+