பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தலித் வீடு எங்கே?".. கையில் கத்தரிகோலுடன்.. தெருத்தெருவாக அலையும் அண்ணன் - தம்பி.. ஏன் தெரியுமா?

தலித் மக்களுக்கு முடிவெட்டி வரும் சகோதரர்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: "இங்கே தலித் வீடு எங்கே இருக்கு?" என்று கேட்டபடி, அண்ணன் - தம்பி 2 பேரும், கையில் கத்தரிகோலுடன் தெருத்தெருவாக மைசூரில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா? தழைத்தோங்கும் "மனிதம்"தான்..!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கபசோஜ் கிராமத்தை சேர்ந்தவர்கள் 2 பேர்.. ஒருவர் பெயர் கே.பி. மகாதேவா, இன்னொருவர் பெயர் கே.பி. சித்தராஜு.. இருவரும் அண்ணன் - தம்பிகள்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இருவருமே முடிதிருத்தும் வேலையை பார்ப்பவர்கள்... கட்டிங் & ஷேவிங் ரெண்டும் உண்டு.. கடந்த 8 வருடமாகவே செய்து வருகிறார்கள்.. இவர்களுக்கென்று கடை எதுவும் இல்லை..

 "அய்யோ".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

 பட்டியலினம்

பட்டியலினம்

இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே, இந்த சகோதரர்கள், மிக குறைந்த விலையில் வீடு வீடாக சென்று ஆண்களுக்கு முடி வெட்டுகிறார்கள்.. அதுவும் பட்டியலின மக்கள் எங்கு இருக்கிறார்களோ, அவர்களை தேடி தேடி சென்று முடிவெட்டி தருகிறார்கள்.

சகோதரர்கள்

சகோதரர்கள்

கபசோஜ், குருஹுண்டி, கவுடராஹுண்டி, மதனஹள்ளி போன்ற கிராமங்களில் இருக்கும் ஆண்களுக்கு கட்டிங் செய்துவிடுகிறார்கள்.. ஷேவிங்கும் உண்டாம்.. இதனால், இந்த பகுதிகளில் சகோதரர்களுக்கு ஏக மவுசு கூடியுள்ளது.. நல்ல பெயரும் கிடைத்து வருகிறது.. நிறைய கிராமங்களுக்குள், ஏற்கனவே சலூன் கடை வைத்திருப்பவர்கள், தலித் சமூக மக்களுக்கு முடிவெட்ட அனுமதி தருவதில்லையாம்.. இந்த சகோதரர்களை ஊருக்குள் விடாமலும் பல இடங்களில் தடுத்துள்ளனர்.

நல்லிணக்கம்

நல்லிணக்கம்

எனினும் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், தங்கள் சமூக ஆண்களுக்கு நாங்கள் உதவுவோம் என்று கிராமங்களில் உள்ளோர் கூறுகின்றனர்.. அதேபோல இந்த சகோதர்களும், பணம் மட்டுமே தங்களுக்கு குறிக்கோள் இல்லை என்றும், மக்களிடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சியில், இதுபோன்ற தலித் காலனிகளில் சிறந்த சலூன் கடைகளை வைக்க விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.

கடைகள்

கடைகள்

ஹேர்கட் செய்ய 40 ரூபாய், ஷேவ் செய்ய 20 ரூபாயாம்... தங்களை போன்றோருக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள இந்த சகோதரர்கள், தலித்துகள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் சலூன் கடைகளை அமைக்கும்வரை, இப்படியே எல்லா வீடுகளுக்கும் சென்று சேவைகளை செய்ய போகிறோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்..!

English summary
Two Dalit brothers give haircut service in Karnataka Village
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X