காய்கறி மூட்டைகளில் தமிழகத்துக்கு கர்நாடகா சரக்கு கடத்தல்- அலேக்காக 2 பேரை தூக்கிய பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: காய்கறி மூட்டைகளில் மதுபாட்டில்களை பதுக்கி தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 2 பேரை கர்நாடகாவின் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் இருந்து ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்பட்டன.

அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பெருமளவு மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு கள்ள சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வேனில் காய்கறி வண்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கே.ஆர். மாக்கெட் சோதனை சாவடியில் பெங்களூரு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு காய்கறி கொண்டு சென்ற டெம்போவில், மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு இருவரை கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த ராமகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இந்த மதுபாட்டில்களை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர். டெம்போவில் காய்கறி சாக்குகளில் பதுக்கி கடத்தப்பட்ட 580 பெட்டிகளில் இருந்த 509 லிட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications