குளியல் அறையில் இறந்து கிடந்த இரு சகோதரிகள்! ஒருவருக்கு நிச்சயதார்த்தமான சோகம்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மைசூரில் குளியல் அறைக்குச் சென்றபோது அங்கிருந்த Geyserல் இருந்து கார்பன் மோனோக்சைடு வாயுவை சுவாசித்ததால் இரு சகோதரிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரை அடுத்த பிரியாபட்டினத்தின் ஜோனிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு 4 மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. குல்பம் தாஜ் (23), சிம்ரன் தாஜ் (21) ஆகிய இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் அல்தாப் பாஷா வசித்து வந்தார்.

அண்மையில் 3ஆவது மகளான குல்பம் தாஜுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாம். கடந்த 23-ஆம் தேதி அன்று திருமணத்தையொட்டி சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு மணமகன் வீட்டாரும் வந்திருந்தனர்.
இதையடுத்து அந்த சடங்கு முடிந்ததும் இரு சகோதரிகளும் ஒன்றாக குளிக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சகோதரிகளின் பெற்றோர், உறவினர் எல்லாம் கதவை தட்டி பார்த்தனர்.
பாத்ரூமில் இருந்து எந்த சப்தமும் இல்லை. இதையடுத்து கதவை உடைத்து பார்த்த போது இருவரும் மயங்கிக் கிடந்தனர். பதறிய உறவினர்கள் இருவரையும் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பிரியாபட்டினம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் பிரமோத் குமார் கூறுகையில், குளியல் அறையில் இருந்த ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதை இருவரும் சுவாசித்ததால் மூச்சுத்திணறி இறந்ததாக தெரிவித்தார்.
மேலும் குளியல் அறையில் வாட்டர் ஹீட்டர் போன்ற உபகரணங்களை பொருத்தும் போது காற்றோட்டம் இருக்கும் ஜன்னலுக்கு அருகே வைக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருமணம் நடக்கும் மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்திற்கு இரு மகள்களின் இழப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் சடலங்களை பார்த்து அவர்களின் கதறல் காண்போரை கலங்கச் செய்தது.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications