"தவிக்கும்" சசிகலா.. 10 நாளா என்னாச்சு.. ஏன் டாக்டர்கள் பார்க்கலையா.. என்ன நடக்குது சிறைக்குள்..?
சசிகலாவுக்கு ஏன் உடனடியாக சிகிச்சை தரவில்லை
பெங்களூரு: சசிகலாவுக்கு 10 நாட்களாக சரியான சிகிச்சை தரப்படவில்லை என்று தம்பி திவாகரன் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. அப்படியானால் பத்து நாட்களாக சசிகலாவுக்கு உடம்பு சரியில்லையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் என்னவென்றால், சசிகலா உடம்புக்கு ஆபத்து இல்லை.. அவருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதனால் மன்னார்குடி உறவுகள் மட்டுமல்லாமல் அமமுகவினரும் கவலை கொண்டுள்ளனர்... உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.

சக்தி
தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழக அரசியலில் இருப்பவர் சசிகலா. அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலே தலைகீழாக மாறிப் போய் விடும். அதற்காகத்தான் பலரும் காத்துக் கிடக்கின்றனர். இதைத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூட சொல்லி வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

மூச்சுதிணறல்
உண்மையில் சசிகலாவுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை... கொரோனா இல்லை என்று சொல்லி விட்டார்கள்.. இருந்தாலும் ஆக்சிஜன் லெவல் குறைந்திருப்பது ஏன்? அவருக்கு மூச்சு திணறல் வருவது ஏன்.. ஐசியூவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை போயிருப்பது ஏன்.. ரொம்ப நாளாகவே அவருக்கு உடம்பு சரியில்லையா.. இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

உபாதைகள்
சசிகலாவுக்கு வேறு உடல் உபாதைகள் ஏதாவது இருக்கிறதா? அவருக்கு பிரஷர் இருக்கிறதா அல்லது பிரஷர் அதிகரிக்கும் அளவுக்கு ஏதாவது சம்பவம் நடந்து விட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் கூடவே எழுகின்றன. தன்னை சுற்றி பெரிய பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருப்பது சசிகலாவுக்குத் தெரியுமா? ஒருவேளை அது தெரிந்துதான் அவருக்கு மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்து விட்டதாக என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன.

ஆர்வம்
எது எப்படியோ சசிகலா திரும்பி வர வேண்டும், அதுவும் பழைய வைராக்கியத்துடன் வர வேண்டும், ஆரோக்கியமாக திரும்ப வேண்டும் என்று மன்னார்குடி உறவுகள் ஆர்வத்துடன் காத்துள்ளன. ஒரு பக்கம் கமலா ஹாரிஸால் மன்னார்குடி வட்டாரமே நேற்று பரவசமாக காணப்பட்டது. ஆனால் அதே மண்ணின் மகளான சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் என்று கேள்விப்பட்டதும் மன்னார்குடி மக்கள் சற்றே பதட்டமாகி விட்டது உண்மைதான்.
-
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications