பெங்களூரில் தொழில் அதிபர் காதலியுடன் கல்யாணம் செய்யாமலேயே வாழ்க்கை.. போலீசுக்கு தெரியவந்த ட்விஸ்ட்
பெங்களூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாயாங்க் ரஜனி என்பவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு உள்பட்ட கரலூரு-கண்ணூரு மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மாயாங்க் கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். திருமணம் செய்யாமல் காதலியுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது இன்றைக்கு பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, கொச்சி, டெல்லி உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த கலாச்சாரம் பின்னாளில் இருவருக்குமே சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அந்த உறவு போரடித்து விடும் போது, இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவிட்டு பிரிந்துவிடுகிறார்கள்.. சில நேரங்களில் அது சிக்கலான சூழலை ஏற்படுத்துகிறது. உறவை பிரிவதை தாங்க முடியாமல் சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள். பெங்களூரில் நடந்தது வேறு விஷயம்.. என்னவென்று பார்ப்போம்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயதாகும் மாயாங்க் ரஜனி என்பவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கரலூரு-கண்ணூரு மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரில் ஒரு நிறுவனத்தை மாயாங்க் நடத்தி வந்தார்.
இதற்கிடையில், மாயாங்க்குக்கு, மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் மாயாங்க் வேலையும் கொடுத்தார். அதன்பிறகு, தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே இளம்பெண்ணையும் மாயாங்க் தங்க வைத்துள்ளார்.
அதன்பின்னர் மாயாங்க், இளம்பெண் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து மாயாங்க் கீழே குதித்தார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதுபற்றி அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் விரைந்து சென்று மாயாங்க் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவருடன் வசித்த இளம்பெண்ணிடமும் விசாரித்தனர். இதில் மாயாங்க் நடத்தி வந்த நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் உயிரைவிட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications