இனி ஐடி ஊழியர்களுக்கு தினசரி 14 மணி நேர வேலை? கர்நாடக ஐடி துறை அமைச்சர் சொல்வது என்ன! பரபர தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தம் தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. இதற்கு ஏற்கனவே அங்குள்ள ஐடி ஊழியர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கிடையே இது தொடர்பாகக் கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூரைத் தான் ஐடி தலைநகர் என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெங்களூரில் அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே அங்கே ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிப்பது தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது.
அமைச்சர் பிரியங்க் கார்கே: இதற்கிடையே இது தொடர்பாக அம்மாநில ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாக நீட்டிப்பது தொடர்பாக ஐடி நிறுவனங்களின் முன்மொழிவு குறித்து தனக்குத் தெரியாது என்று பிரியங்க் கார்கே தெரிவித்தார். இந்த வரைவு மசோதாவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் கொண்டு வந்ததாகவும் இதற்கு ஒப்புதல் தரும் முன்பு தீவிர ஆலோசனை நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
என்ன சொன்னார்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் ஐடி நிறுவனங்கள் என்ன முன்மொழிவைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது.. ஆனால் தொழிலாளர் துறை இந்த விவகாரத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்துள்ளது. அது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த மசோதா பற்றி தவறான கருத்து உள்ளது. நாங்கள் இந்த மசோதா தொடர்பாக விவாதம் நடத்துவோம். அதன் பிறகு இது குறித்து உரிய விளக்கத்தைத் தர உள்ளோம்" என்றார்.
பின்னணி என்ன: முன்னதாக ஐடி நிறுவனங்கள் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாகக் கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. அதற்குக் கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. 14 மணி நேர வேலை என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் விமர்சித்திருந்தன.
மேலும், ஐடி ஊழியர்கள் சங்கம் மேலும் கூறுகையில், "இது அமலுக்கு வந்தால் மூன்று ஷிப்ட் முறைக்குப் பதிலாக இரண்டு ஷிப்ட் முறை அமலுக்கு வரும். இதனால் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருக்கிறது. அதிக நேரம் வேலை செய்வது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பல்வேறு ஆய்வுகள் காட்டுகிறது. ஏற்கனவே ஐடி துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வும் 55% பேர் உடல்நிலை பாதிப்புகளும் உள்ளன.
வேலை நேரத்தை அதிகரிப்பது நிலைமையை மோசமாக்கும். எனவே, இந்த விவகாரத்தைக் கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மசோதாவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அம்மாநில அரசே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications