"கலர்" மாறும் தென்னகம்?.. பள்ளிகளில் "பகவத்கீதை".. கமிட்டி ரெடியாகிறது.. கர்நாடக அமைச்சர் அதிரடி
பள்ளிகளில் பகவத்கீதையை சேர்க்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது
பெங்களூரு: "பள்ளி பாடத்திட்டங்களில் பகவத்கீதையை சேர்ப்பது தொடர்பாக ஆய்வு நடத்த கமிட்டி அமைக்கப்படும், அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று கர்நாடக தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது.
வடமாநிலங்களில் இத்தகைய அறிவிப்பு வெளியாவது இயல்பு என்றாலும், பிறகு, பாஜக ஆட்சி நடைபெறும் இன்னொரு மாநிலமான கர்நாடகாவிலும் இதே பேச்சு கிளம்பியது பல தரப்பையும் அதிர வைத்தது.

கர்நாடகா
கர்நாடகாவிலும் குஜராத் போலவே, இத்தகைய பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையே அறிவிப்பு வெளியிட்டார்.. பொம்மை இவ்வாறு சொன்ன மறுநாளே, பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க, கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்..

குழந்தைகள்
அப்போது அவர் சொல்லும்போது, "பகவத் கீதையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் விவாதித்த பிறகே, அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுப்போம், குழந்தைகளிடையே நமது கலாசார விஷயங்கள் மெல்ல மறைந்து வருகிறது... அதனால்தான், அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமாயணம், மகாபாரதம் தொடர்பான உள்ளடக்கம் கற்பிக்கப்படும், அறிநெறி வகுப்பு, வாரம் ஒருமுறை இருந்தது...

வல்லுநர்கள்
வரும் நாட்களில் இதை அறிமுகப்படுத்துவது குறித்து முதலமைச்சரின் ஆலோசனையைப் பெறுவோம். இதை கற்பிக்கலாம் என்று முடிவு செய்தால் நிச்சயம் கல்வி வல்லுனர்களுடன் வகுப்பின் கால அவகாசம் உட்பட விஷயங்கள் விவாதிப்போம்.. மகாத்மா காந்தி உட்பட பலர் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் உத்வேகம் அளிக்கின்றனர்.. காந்தியின் தாய், ராமாயணம், மகாபாரதம் பெருமையை போதித்துள்ளார்... அதனால், இந்து ஹிந்து சமய நூல்களிலுள்ள ஒழுக்கங்கள் குறித்து மாணவர்கள் போதிப்பதால் இந்திய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முடியும்.. இரவில் தூங்குவதற்கு முன்பு பகவத் கீதை படிப்பதால், தனக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கிறது என்று முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாஎன்கிட்டே சொன்னார்" என்று தெரிவித்திருந்தார்.

பாடத்திட்டம்
அமைச்சரின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.. ஏற்கனவே பாடத்திட்டத்தில் இருக்கும் விஷயத்தை மறுபடியும் பெரிதுபடுத்தியும், புதிதாகவும் காட்ட தேவையில்லை... மதங்கள் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் தப்பில்லை, ஆனால், பாஜகவினர் என்ன விஷயத்தை பாட புத்தகத்தில் கொண்டு வருகின்றனர் என்பதை பார்க்க வேண்டும்... பாஜக புதுமையான யோசனையை ஒன்றும் அறிமுகம் செய்யவில்லை" என்று கூறியிருந்தார்.

பாஜக அரசு
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தேசிய கல்வி கொள்கையின்கீழ் பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கொண்டு வரும் திட்டத்திற்கு, கல்வியாளர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது... கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.. ஆனால், கர்நாடக முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அமைச்சர் நாகேஷ், "பள்ளிகளில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை பாடமாக கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று சட்டசபையில் மறுத்திருந்தார்.

பகவத்கீதை
இப்போது மீண்டும் அதே அறிவிப்பையே நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.. கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதத்தில், குஜராத் அரசு பகவத் கீதையை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடகாவும் இதை பின்பற்ற வேண்டும் என்று பாஜக பிரனேஷ் கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சர் நாகேஷ் இதற்கு பதிலளித்து பேசினார்.. அப்போது, மகாபாரத போரின்போது, அர்ஜுனன் மனதில் குழப்பம் ஏற்பட்டது... அப்போது அவருக்கு ஸ்ரீகிருஷ்ணர் போதித்தது தான் பகவத் கீதை...

கொந்தளிப்பு
இப்போதைய குழப்பமான சூழ்நிலைகளுக்கு, பகவத கீதைதான் சிறந்த தீர்வு அளிக்கும்... இதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பது பலரது கருத்தாகும்.. பகவத் கீதையை பாடத்தில் சேர்ப்பது தொடர்பாக, அரசு கமிட்டி ஒன்றை அமைக்கும். அதன்பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்றார். ஏற்கனவே கல்வி மயம் காவி மயமாகி வருகிறது என்ற சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்புகள் மேலும் கொந்தளிப்பையும், எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி ஏற்படுத்தி வருகிறது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications