Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சை பேச்சுகளின் பீரங்கி! யார் இந்த ஈஸ்வரப்பா! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் புகார் கூறி காண்ட்ராக்டர் தற்கொலை செய்த வழக்கில் கேஎஸ் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளார். சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் பெற்ற இவர் தான் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் எனவும் கூறியிருந்தார்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளார்.

இந்நிலையில் தான் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்ட அரசு பணிகளுக்கான பணத்தை விடுவிக்க 40 சதவீதம் வரை அமைச்சர் ஈஸ்வரப்பா கமிஷன் கேட்டதாக கூறி காண்ட்ராக்டர் சந்தோஷ் பட்டீல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுதொடர்பாக ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டை ஈஸ்வரப்பா இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

 யார் இந்த ஈஸ்வரப்பா

யார் இந்த ஈஸ்வரப்பா

அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்த கேஎஸ் ஈஸ்வரப்பா சிவமொக்கா சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஆவார். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். இவர் கூறும் கருத்துக்கள் அடிக்கடி விவாதமாக மாறும். இது கட்சிக்குள் ஒருவித அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் அவரது சமீபத்திய சர்ச்சை பேச்சுக்களின் விவரம் வருமாறு:

செங்கோட்டையில் காவிக்கொடி

செங்கோட்டையில் காவிக்கொடி

2022 பிப்ரவரியில் ஹிஜாப் பிரச்சனையின்போது சிவமொக்காவில் உள்ள அரசு கல்லூரியில் தேசியக்கொடி அகற்றப்பட்டு காவிக்கொடி பறக்கவிடப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் குற்றம்சாட்டினார். அப்போது பதிலளித்த ஈஸ்வரப்பா, ‛‛விரைவில் டெல்லி செங்கோட்டையில் காவி கொடி பறக்கும்'' எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் ஈஸ்வரப்பா பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். மேலும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு இரவில் தர்ணாவை மேற்கொண்டனர்.

கொலை குறித்து சர்ச்சை

கொலை குறித்து சர்ச்சை

அதன்பின் பிப்ரவரி 20ல் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா சிவமொக்காவில் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த ஈஸ்வரப்பா, ‛‛முஸ்லிம் வாலிபர்கள் தான் ஹர்ஷாவை கொலை செய்துவிட்டனர்'' என பகிரங்கமாக கூறிய ஈஸ்வரப்பா, அவர்களை விமர்சனமும் செய்தார். இது பிரச்சனை உருவாக்கும் வகையில் இருந்தது. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி ஈஸ்வரப்பா மீது சிவமொக்கா தொட்டபேட்டே போலீசார் 2 வாரத்துக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர்.

 ஆர்எஸ்எஸ்ஸில் முஸ்லிம்கள்

ஆர்எஸ்எஸ்ஸில் முஸ்லிம்கள்

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடர் விவாதத்திலும் ஈஸ்வரப்பா சர்ச்சையில் சிக்கினார். அப்போது சட்டசபையில், ‛‛கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒரு நாள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவார்கள். இந்த நாள் வெகு தொலைவில் இல்லை'' எனக்கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் 2 வழக்கு

ஒரு மாதத்தில் 2 வழக்கு

சிவமொக்காவில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 2 வாரத்துக்கு முன்பு தான் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக சந்தோஷ் பட்டீல் தற்கொலை தொடர்பாகவும் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் 2 சம்பவங்களில் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிந்து உள்ளனர். இதில் சந்தோஷ் பட்டீல் தற்கொலை தொடர்பான வழக்கில் தான் ஈஸ்வரப்பா தனது பதவியை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+