12 கடைசி ஆசை.. மனைவி கொடுமையால் தற்கொலை செய்த பெங்களூர் ஐடி ஊழியர்.. எலான் மஸ்கை டேக் செய்தது ஏன்?
பெங்களூர்: பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷ் தனது தற்கொலைக்கு முன் 12 கடைசி ஆசைகளை வெளியிட்டு உள்ளார். . அதுல் சுபாஷ் தற்கொலை செய்யும் முன் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க், டிரம்ப் போன்றவர்களை டேக் செய்து இதை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய அரசாங்க அதிகாரிகளை, நீதிமன்றத்தை டேக் செய்தால் பலன் அளிக்காது என்பதால் அவர் எலான் மஸ்க், டிரம்ப் போன்றவர்களை டேக் செய்து உள்ளார். மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் பெங்களூரை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. சட்டம் எந்த வகையிலும் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை என்று கூறி தற்கொலை செய்துள்ளார்

அவரின் 12 கடைசி ஆசைகள்:
1.எனது அனைத்து வழக்கு விசாரணைகளும் நேரலையில் நடக்க வேண்டும், மேலும் இந்த நாட்டு மக்கள் எனது வழக்கைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த பெண்கள் இந்தியாவின் சட்ட அமைப்பு மற்றும் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
2. நான் பதிவேற்றிய இந்த தற்கொலைக் குறிப்பு மற்றும் வீடியோக்களை பொதுவில் மக்கள் பார்க்க அனுமதிக்கவும்
3. ரீட்டா கௌசிக் உத்தரபிரதேசத்தில் நீதிபதியாக உள்ளார். அவள் ஆவணங்களை சிதைத்துவிட்டார். , சாட்சிகள் மீது அழுத்தம் கொடுத்தார். என்னிடம் லஞ்சம் கேட்டார். அவரின் செயல்பாடு மற்ற வழக்குகளை பாதிக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், பெங்களூரு நீதிமன்றங்கள் உபி நீதிமன்றங்களை விட ஒப்பீட்டளவில் அதிக சட்டத்தை மதிக்கின்றன.
4. நீதிபதிகள் ஏன் நீதியுடன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான தீர்ப்பு கீழே உள்ளது. அனைத்து தரப்பையும் ஆய்வு செய்த பின்பே தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
5. என்னுடைய சாம்பலை கரைக்க வேண்டாம். இதில் முறைகேடு செய்த எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்த நீதிபதி விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் என் சாம்பலை நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள சாக்கடையில் ஊற்றவும்.
7. இந்தியாவின் சட்ட அமைப்பை நான் அதிகம் நம்பவில்லை என்றாலும் என்னை இந்த முடிவு எடுக்க தூண்டியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுங்கள். என் மனைவி போன்றவர்களை சிறையில் அடைக்காவிட்டால், அவர்கள் மேலும் தைரியமடைந்து எதிர்காலத்தில் சமூகத்தின் மற்ற ஆண்கள் மீது மேலும் பல பொய் வழக்குகளைப் போடுவார்கள்.
8. நீதித்துறை விழித்து, என் பெற்றோர் மற்றும் என் சகோதரர்கள் மீதான பொய் வழக்குகளில் அவர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
9. என் மரணத்திற்கு காரணமாக தீயவர்களுடன் பேச்சுவார்த்தைகள், தீர்வுகள் மற்றும் மத்தியஸ்தங்கள் இருக்கக்கூடாது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
10. என் மனைவி (கத்தி) பொய் வழக்குகள் போட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வரை தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையில் அவர்கள் வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது.
11. இதுவரை வழக்கு விசாரணையின் போது என் குழந்தையை அவர் கோர்ட்டுக்கு அழைத்துவரவில்லை. நான் குழந்தையை பார்க்க கூடாது என்பதால் அப்படி செய்துள்ளார். இனி அனுதாபம் வேண்டும் என்று குழந்தையை கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவார். இந்த நாடகத்தை கோர்ட் அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறேன்
12. என் மனைவியின் துன்புறுத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்ந்தால், எனது வயதான பெற்றோர் நீதிமன்றங்களில் கருணைக் கொலையை கேட்க வேண்டும். அதை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.
-
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications