நடிகைக்கு போன் கால், மனைவிக்கு மெசேஜ்.. தொழிலதிபர் தற்கொலைக்கு முன்பு நடந்தது என்ன?
பெங்களூர்: பெங்களூரில் நடிகை கிரிஷி தாபாண்டா பிளாட்டில் அவரது பெட்ரூமில் தொழிலதிபர் வைஷாக் இறந்த கிடந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைஷாக் தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாக நடிகை கிரிஷி தாபண்டாவிற்கு போன்போட்டு பேசியதும், மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட் சாவி எப்படி வைஷாக்கிற்கு எப்படி சென்றது? என்ற கேள்வி எழந்துள்ளது.
பெங்களூரில் வசித்து வந்தவர் தொழிலதிபர் வைஷாக் என்ற வைஷாக் உபாத்யாய் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். மனைவி பெயர் மேகா.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவில் வைஷாக் பெங்களூர் ஆர்ஆர் நகரில் உள்ள நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட்டிற்கு சென்றார். வைஷாக் மற்றும் நடிகை கிரிஷி தாபண்டா ஆகியோர் நெருக்கமான நண்பர்கள்.
இதற்கிடையே தான் நள்ளிரவில் பிளாட்டில் உள்ள கிரிஷி தாபண்டாவின் பெட்ரூமில் வைஷாக் இறந்து கிடந்தார். சேலையை பயன்படுத்தி மின்விசிறியில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சமயத்தில் பிளாட்டில் கிரிஷி தாபண்டா இல்லை. பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் இருந்தார். கிரிஷி தாபண்டா பிளாட்டுக்கு வந்தபோது தான் வைஷாக் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து போனார்.
உடனடியாக பிளாட் உரிமையாளர் போலீசுக்கு தகவல்தெரிவித்தார். போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு வைஷாக்கின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கில் நடிகை கிரிஷி தாபண்டா பங்கேற்க சென்றார். அப்போது வைஷாக்கின் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி கூறினர்.
நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட்டில் தொழிலதிபர் வைஷாக் தற்கொலை செய்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும், கேள்வியையும் எழுப்பி உள்ளது. இந்த வழக்கில் பல்வேறு மர்மமூடிச்சுகள் உள்ளன. இதற்கிடையே ஆர்ஆர் நகர் போலீசில் தொழிலதிபர் வைஷாக்கின் மனைவி மேகா 2 பக்கத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் வைஷாக்கின் இறப்பு தொடர்பாக யார் மீதும் சந்தேகம் வரவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் வைஷாக்கின் தற்கொலை முடிவிற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக வைஷாக் தனது தோழியான நடிகை கிரிஷி தாபண்டாவிற்கு போன் செய்து பேசியதோடு, மெசேஜ் அனுப்பி உள்ளார். அதேபோல் மனைவிக்கும் அவரது செல்போனில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது. இதனால் போலீசார் வைஷாக்கின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவரது கடைசியில் யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்? வாட்ஸ்அப்பில் யாரிடம் 'சாட்' செய்துள்ளார்? மெசேஜ் என்ன அனுப்பி உள்ளார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிஷி தாபண்டாவிற்கு போன் போட்ட வைஷாக், ''எனக்கு இந்த வாழ்க்கை போதும் என்று நினைக்கிறேன். இனி எனக்கு வாழ விரும்பவில்லை'' என்று மெசேஜ் அனுப்பி உள்ளார். அதற்கு கிரிஷி தாபண்டாவிற்கு, ''எதுவுமே செய்ய வேண்டாம். நான் அங்கு வந்து கொண்டிருக்கிறேன். நான் வரும் வரை காத்திருங்கள். நாம் இருவரும் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சேர்ந்து போய்விட்டு வரலாம். அங்கு சென்றால், மனம் அமைதியாக வந்துவிடும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் வைஷாக் தனது மனைவிக்கு மேகாவிற்கு, ''தந்தை எப்படி இருக்கிறார்? என்னுடைய மகன் எப்படி இருக்கிறார்? பள்ளிக்கு செல்கிறானா?'' என்று மெசேஜ் அனுப்பி உள்ளார். வைஷாக் தனது குடும்பத்தை பிரிந்து சில வாரங்களாக வசித்து வந்த நிலையில் இந்த மெசேஜை அவர் தனது மனைவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் அவர் திட்டமிட்டே தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசார் நினைக்கின்றனர்.
அதேபோல் கிரிஷி தாபண்டாவின் பிளாட் சாவி எப்படி வைஷாக் கைக்கு போனது? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் வைஷாக் தற்கொலை தொடர்பாக போலீசார் நடிகை கிரிஷி தாபண்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, நடிகை கிரிஷி தாபண்டாவிடம் வைஷாக் என்ன பேசினார்? என்பது பற்றி விசாரித்துவிட்டோம். இதனால் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர்.














Click it and Unblock the Notifications